புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2019

கோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி

னாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் 100 ஆவது நாள் முடிவதற்குள் தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


அதனை எடுக்க தவறினால் சர்வதேச ரீதியாக ஐநாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு பிராந்திய பகுதியில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் பகிரங்கமாக கோருவோம் எனவும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட்ட போர்க் குற்றத்தில் ஈடுபட்ட ஓர் போர் குற்றவாளியால் இனப் பிரச்சனைக்கு சரியான தீர்வு நீதி கிடைக்கும் வரை எம்மால் வாழ்த்துக்கூற முடியாது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வெற்றிக்காக வாழ்த்துகளை கூறும் மன நிலையில் தமிழ் மக்கள் இல்லை. நானும் அந்த மன நிலையில் இல்லை.

ஓர் ஜனநாயக நாட்டிலே நாட்டின் ஜனாதிபதி ஆனதும் முதல் நூறு நாட்கள் வழங்கப்படும்.அந்த நாட்காளில் அவருக்கு எதிரான பாரதூரமான போராட்டங்களோ, கருத்துக்களோ, விமர்சனங்களோ முன்வைக்கப்படுவதில்லை.


ஆகவே தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கும் 100 நாட்கள் நாம் வழங்குகின்றோம்.

நூறாவது நாள் முடிவதற்குள் தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கானஉறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அதனை எடுக்க தவறினால் சர்வதேச ரீதியாக ஐநாவின் உதவியுடன் வடக்கு கிழக்குபிராந்திய பகுதியில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் பகிரங்கமாக கோரிஇலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் அழுத்தங்களை கோருவோம்.எந்த தடை வந்தாலும்சந்திக்க தயார்.

ஆகக் குறைந்தது இணைப்பாட்சி, சமஸ்டியை கொண்டதான தீர்வையாவது ஐக்கிய இலங்கைக்குள் வழங்க முன்வரவேண்டும்.


பௌத்த மதம் ஆழமாக வேர் ஊன்றிய இடத்தில் வைத்து புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்றுள்ளார்.

அனுராதபுரத்தில் துட்டகைமுனு நினைவு சின்னத்துக்கு முன்பாக பதவி ஏற்றுள்ளார். இதன் ஊடாக நவீன துட்டகைமுனுவாக மாறப் போகின்றாரா? அல்லது வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கப் போகின்றாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமெனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ad

ad