புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 நவ., 2019

நானா விடுவேன் அமைச்சு கதிரையை:டக்ளஸ் ஆனால் எந்த முகத்தோடு போய் கேட்பேன் மக்கள் கூட்டமைப்போடு போய்டடங்களே

கோட்டபாய அமைச்சரவையில் அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லையென வெளிவரும் செய்திகளை ஈபிடிபி கட்சி மறுதலித்துள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாம் ஆதரவளித்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். அவரது வெற்றிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


அதேவேளை அமைச்சு பொறுப்பேற்பு தொடர்பில் தன்பெயரில் பொய் செய்திகள் வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இம்முறை நடைபெறும் தேர்தலில் கோட்டபய ராஜபக்ச அவர்களே வெற்றி பெறுவார் என்றும் அவரது வெற்றியில் பங்கெடுக்க வேண்டும் என்றும் எமது மக்களிடம் நாம் கேட்டுவந்திருக்கின்றோம்.

அந்த வகையில் எமக்கு முன்னால் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் புதிய பாதையில் தமிழ் மக்களை கௌரவத்தோடும் அச்சமின்றியும் வழிநடத்திச் செல்லுகின்ற பொறுப்பை வரலாறு என் மீதே மீண்டும் சுமத்தியுள்ளது. அதை ஏற்று எமது மக்களுக்கான எமது பயணம் தொடரும்.

வெற்றியிலும் தோல்வியிலும் இருந்து பாடங்களையும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டு முன்னொக்கிச் செல்வோம்

எனது பெயரால் வெளியாகும் அனாமதேய செய்திகள் விசமத்தனமான உள்நோக்கத்தடன் சிலரால் வெளியிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்தாகும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோத்தபாயவிற்கு போதிய வாக்கினை திரட்டி வழங்காமையினால் தான் இம்முறை அமைச்சு பொறுப்பை ஏற்கப்போவதில்லையென டக்ளஸ் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.