புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 நவ., 2019

சிறீகாந்தாவா? செல்வமா? பலசாலி: பிளவடையும் டெலோ!சிறீகாந்தா தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமையினை முழுமையாக கைப்பற்ற சிறீகாந்தா தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று யாழில் நடத்திய கூட்டத்திற்கு போட்டியாக தனது அலுவலகத்தில் கூட்டமொன்றை கூட்ட அவர் முற்பட்ட போதும் அது தோல்வியில் முடிவமைடந்துள்ளது..


கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி சிறிகாந்தா தலைமையிலான யாழ் அணியினர், சிவாஜிலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பநிலையை ஆராய நேற்று யாழில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் பிரமுகர்கள் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்ட சுமார் 20 பேர் வரையானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதன்போது, கட்சிக்குள் நடக்கும் குழப்பங்கள் குறித்து ஆராயப்பட்டது.


இதேவேளை, செல்வம் அடைக்கலநாதனால் அழைக்கப்பட்ட இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென மாவட்டத்திலுள்ள ரெலோ பிரமுகர்களை, சிறிகாந்தா ரெலோவினர் தொலைபேசி வழியாக அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் நடந்த இந்த கலந்துரையடலின் போது, கட்சியின் யாழ் மாவட்ட பிரமுகர்களுடனான கலந்துரையாடலிற்கு சிறிகாந்தா அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தின்போது, தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியிலிருந்த ரெலோ வெயளியேற வேண்டுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.

வரும் சனிக்கிழமை கட்சியின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெறும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேவரும் பிரேரணையை தான் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் டெலோ கட்சியின் பெருமளவிலானோர் தற்போது செல்வம் அடைக்கலநாதன் பக்கம் அணிதிரண்டுள்ளனர்.