புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



கடையில் வாடிக்கையாளர் விட்டு சென்று நகைகளை போலீசில் ஒப்படைத்த இளைஞர்
கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி. வயது-45, கட

ந்த மாதம் 8-ம் தேதி புதிதாக 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர கம்மல் ஆகியவற்றை விலைக்கு வாங்கினார்.
இதன் மதிப்பு 3.75 லட்சம் ரூபாய். இதன் பின் கிணத்துக்கடவில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க சுந்தராபுரத்தில் உள்ள ஒரு பேன்சி கடைக்கு சென்றார்.
அப்போது, நகைகள் அடங்கிய பையை அந்த பேன்சி கடைக்குல்லேயே தவற விட்டுவிட்டார். இதையறியாமல் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று வீடு திரும்பிய கிருஷ்ணவேணிக்கு, மறுநாள் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதற்காக, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த பிரச்சனையில் இருந்த கிருஷ்ணவேணி நகை வாங்கிய விசயத்தையே சுத்தமாக மறந்து விட்டார்.
சுந்தராபுரத்தில் இருந்த பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் சிவகுமார் (வயது-34) என்பவர் மாலையில் தன்னுடைய கடையை மூடும் போது, நகை அடங்கிய கைப்பையை பார்த்துள்ளார்.
அதை, எடுத்தது பத்திரமாக வைத்திருந்தார். பையை தொலைத்த வாடிக்கையாளர் தன்னுடைய கடைக்கு வருவார் என்ற நம்பிக்கையில், இரண்டு நாட்கள் அந்த நகை பையை தன் வசம் வைத்திருந்தார்.
ஆனால், யாருமே கடைக்கு வந்து கேட்காததால் இனிமேல் நம் வைத்திருக்க கூடாது என்று முடிவு செய்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மூலம், கோவை  போலீஸ் கமிஷனரிடம் அந்த நகைகள் அடங்கிய பையை ஒப்படைத்தார். புத்தம் புதியதாக இருந்த அந்த நகைகள் வாங்கிய கடையின் விபரம் ஏதும் இல்லை.
இந்த நகையை செய்தவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார் கமிஷனர். அவரது  உத்தரவின்படி அந்த நகைகளை விற்பனை செய்த நகைகளின் உரிமையாளரை இரண்டே நாட்களில் போலீசார் கண்டுபிடித்தனர். பிறகு, அந்த கடை உரிமையாளர் மூலம் நகையை தொலைத்த கிருஷ்ணவேணியை போலீசார் கண்டுபிடித்தனர்.
கமிஷனர் முன்னிலையில் சிவக்குமார் நகைகளை கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தார். சிவக்குமாரின் நேர்மையை போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர். நகையை திரும்ப பெற்ற கிருஷ்ணவேணி கூறுகையில், ""கால் பவுன் கம்மலுக்கு காதை அறுத்துச் செல்லும் இந்த காலத்தில், பத்து பவுன் நகையை திரும்ப ஒப்படைத்துள்ள சிவக்குமாரின் நேர்மை யாருக்கும் வராது. இவரைப் போன்றவர்களால்தான் இன்று மழை பெய்கிறது. நகை திரும்ப கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்சி, என்னிடம் நகையை சேர்க்க உதவிய கோவை போலீசாரின் பங்கை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.

ad

ad