புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சாட்சியம் அளிக்கச் சென்றமையால் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி பாராளுமன்றத்தை அவமதித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு
முன்வைப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 17வது சரத்தின்படி பாராளுமன்றத்தை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கினார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்விருவருக்கும் எதிராக பாராளுமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு கொண்டுவர முடியுமெனவும் அவர் விளக்கமளித்தார்.
பாராளுமன்ற விவாகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுவதற்கு முன்னதாக இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவிதமான அனுமதியையும் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் சாட்சியமளித்தார்களா என்பது தமக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்சியமளித்திருந்தால் பாராளுமன்ற விசேட சிறப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad