புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது:- பிரதமர் உருத்திரகுமாரன்


“நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயக வரம்பிற்குள்ளேதான் நடைபெறுகின்றன. அத்துடன் நமது அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒத்த பல அமைப்புக்கள் ஆரோக்கியமான முறையில் இயங்கிவருகின்றன. எனவே நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அறிதலுக்காக கூறிவைக்க விரும்புகின்றேன். எனினும் இலங்கை அரசாங்கத்தோடு இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த நாட்டிற்குள் நின்று செயற்படுவதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனாலும் தமிழீழம் என்னும் அடிப்படையில் நின்று விலகாமல் செல்லும் எமது அரசியற் செயற்பாடுகள் இன்னும் மேலோங்கி வளர புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தமது ஆதரவைத் தரவேண்டும். இலங்கையைத் தவிர ஏனைய நாடுகளில் நமது தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக மற்றும் அரசியற் செயற்பாடுகள் திருப்தியான முறையில் நடைபெற்றுவருகின்றன என்பதையும் அண்மையில் மலேசியாவில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் நமது பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள் என்ற மகிழ்ச்சியான விடயத்தையும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்”
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விஸ்வநாதன் உருத்திரகுமாரன் கடந்த ஞாயிற்றுக்க்pழமையன்று அமெரிக்காவின் பவ்லோ நகரில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்தார்.
மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் சபாநாயகர் திரு பொன்.பால்ராஜன்�� அமைச்சர் திரு நிமால் விநாயகமூர்த்தி உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஊடக நிறுவனங்களில் பிரதிநிதிகளும் பங்கு பற்றினர். கலந்துரையாடலில் பங்குபற்றி உரையாற்றுவதற்காக திரு உருத்திரகுமாரன் தான் வாழும் நியூயோர்க் நகரில் இருந்த நீண்ட பயணம் செய்து வந்திருந்தரர்.
மேற்படி அரசியல் கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
“எமது நாடு கடந்த அரசாங்கத்தையும் நமது புலம் பெயர் தமிழ் மக்களையும் பொறுத்தளவில் இந்த 2013ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாகும் என்றே நாம் கருதுகின்றோம். 1983ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட முதலாவது கொடூரமான இனப்படுகொலையான ஆடிப்படுகொலையில் 30வது ஆண்டை நாம் நினைவுகூரத் தயாராகிவிட்டோம்.. ஒரு நாட்டிற்குள் நாம் வாழ்ந்து கொண்டு அனுபவித்த துன்பங்கள் இனிமேல் போதும் போதும் என்றாகிவிட்டது. தமிழீழம்- ஸ்ரீலங்கா என்ற இரண்டு நாடுகள் அந்த இலங்கைக்குள் தோன்றினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். வுறழ ளுவயவந ளுழடரவழைn என்னும் இரண்டு தேசங்களின் மூலமான தீர்வு என்ற அடிப்படையில் நமது இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.
மேற்படி சிந்தனையின் அடிப்படையில் நமது தமிழ் மக்களின் மனித உரிமைகளையும் நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த இரண்டு தேசங்களின் மூலமான தீர்வை சர்வதேச இலங்கை அரசாங்கத்தின் மூலம் உறுதிப்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றே நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகின்றது.
மேலும் நாடுகடந்த அரசாங்கத்தின் ஒரு திட்டவரைபே மேற்படி இரண்டு தேசங்களின் மூலமான தீர்வு என்ற கோட்பாடு ஆகும். எனவே நமது நாடு கடந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களுக்கு அமையவே தனது செயற்பாடுகளை கொண்டு செல்கின்றது என்பதை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகம் அவர்களுக்கும் பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் இயங்குகின்றன. அவற்றுள் இனப்படுகொலைகளுக்கு எதிரான குழு மிக முக்கியமானதொன்றாகும். மேற்படி இனப்படுகொலைகள் தொடர்பான குழுவின் முக்கிய பணிகள் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். எனவே மேற்படி பணிகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம்; கேட்டுவருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே இலங்கையை குற்றவாளிக் கூண்டுக்குள் தள்ளி தகுந்த தண்டனை வழங்க ஏதுவாக அமையும்.
மேலும் இந்த 2013ம் ஆண்டு நமது நாடு கடந்த அரசாங்கம் நமது தாயக மண்ணில் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் மாவீரர் குடும்பங்களில் 1000 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அந்த குடும்ப அங்கத்தவர்களின் மறுவாழ்pவுக்கு உதவும் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. மேற்படி திட்டத்திற்கு தேவையான நிதியைத் திரட்டுவதில் நமது நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள். மேற்படி திட்டம் வெற்ற்pகரமாக நடைமுறைப்படுத்தப்பட புலம் பெயர் தமிழர் சமூகம் தங்கள் ஆதரவைத் தரவேண்டும்” என்றார்.
மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் அங்கு சென்றிருந்த வர்த்தகப் பிரமுகர்களும் சமூக உணர்வாளர்களுமான திருவாளர்கள் ரொம் திருக்குமார் மற்றும் கிருபா கிருசாந்த் போன்றவர்கள் திரு உருத்திரகுமாரன் அவர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் சார்பில் செயற்படுவதற்காக மக்கள் அங்கத்துவம் வகிக்கும் வாக்காளர் சங்கங்களை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அத்துடன் தென்சூடான் நாட்டில் அமைவதற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் தூதரகத்தை மிக விரைவில் நிறுவுவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு அங்கு சமூகமளித்திருந்த திரு ரொம் திருக்குமார் உட்பட பல வர்த்தக பிரமுகர்கள் முன்வந்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.
-ஆர். என். லோகேந்திரலிங்கம்-








ad

ad