தலைநகரத்தில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையால் இந்தியா முழுக்க பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க 13 அம்ச திட்டத்தை ஜனவரி 1-ந் தேதி அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா. இந்த பதிமூன்று அம்ச திட்டத்தில் எட்டாவது திட்டம்தான் டாக் டர்கள் மத்தியில் பரபரப்பு "டாக்'காகிக்கொண்டி ருக்கிறது.
"பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு "கெமிக்கல் கேஸ்ட்ரேஷன்' எனப்படும் வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதுதான் அது. இதுகுறித்து... பிரபல பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் நாராயணரெட்டியிடம் உரையாடினோம்.thx nakeeran
""கேஸ்ட்ரேஷன் என்பதற்கு ஆணின் விதையை நீக்குவது என்று பொருள். கெமிக்கல் கேஸ்ட்ரேஷன் என்பதற்கு ஊசிமூலம் ஆணின் விதைப்பையில் கெமிக் கலை செலுத்தி செக்ஸ் ஹார்மோனின் வீரியத்தை இழக்க வைக்கும் செயல்'' என்றார் நாராயணரெட்டி புன்னகைத்தபடி.
""ஏன் டாக்டர் ஆண்மை நீக்கம் செய்து ஓர் ஆணை தண்டிப்பதால் இனி அவனால் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபட முடியாதில் லையா?"" என்று நாம் கேட்க... ""முதலில் ஆண்மை நீக்கம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதை எப்படி நீக்கமுடியும்? ஆண்மை நீக்கம் என்ற வார்த்தையே மருத்துவ ரீதியாக தவறு'' என்று ஆணித் தரமாகச் சொல்லி அதிரவைக்கிறார் டாக்டர் நாராயணரெட்டி.
""ஏன் டாக்டர் ஆண்மையை அழிக்க முடியாது?''’’
""எப்படி டாக்டர்? அப்படீன்னா... ஜெ. கொண்டு வந்த இந்த திட்டம்?''
""பெண்களை பாலியல் கொடுமை கள் செய்கிறவர்களுக்கு என்ன தண்ட னை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுவும் ஓர் அரசு கொண்டுவருவதை நாம் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், கெமிக்கல் கேஸ்ட்ரேஷன் முறையில் "அதை' நீக்குவதால் எந்த பயனும் இல்லை என்பதை ஒரு மருத்துவராக நான் சொல்லியே ஆகவேண்டும். அதாவது, ராஜா காலத்தில் அந்தப்புரத்திலுள்ள ராணி, இளவரசியை பாதுகாக்கும் காவலாளி களுக்கு "அதை' அப்படியே நீக்கிவிடுவது வழக்கமாக இருந்தது. அதைத்தான் இப்போது... அப்படியே நீக்குவதற்கு பதிலாக கெமிக்கல் முறையில் இஞ்செக்ஷன் மூலம் செலுத்தி அதன்’ வீரியத்தை குறைக்கப் போவதாக இப்படியொரு திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆக மொத்தம், குற்றவாளியின் "அதை' நீக்குவதாலோ அல்லது கெமிக்கல் மூலம் ‘அதன்’ வீரியத்தை குறைப்பதாலோ குற்றவாளி ஆணின் டெஸ்ட்ரோஸ் டிரான் என்னும் பாலியல் ஹார்மோன் குறைந்து செக்ஸுவல் ஃபீலிங்ஸ் அடங்கியிருக்குமே தவிர அவனுக்குள் இருக்கும் அந்த வக்கிர எண்ணங்களை முழுமையாக குறைக்க முடியாது. காரணம், டெல்லி மாணவியின் உடலுக்குள் இரும்புக்கம்பியை உட்செலுத்தி கொடூர சித்ரவதை செய்தது வெறும் செக்ஸுவல் ஃபீலிங்ஸ் அல்ல. அந்த குற்றவாளிகளுக்குள் மறைந்திருந்த கொடூரத் தனமான வக்கிர எண்ணம்தான். செக்ஸுவல் ஹார்மோனை குறைப்பதன் மூலம் இதை எப்படிக் களைய முடியும்?''’
""ஏன் டாக்டர்... பாலியல் ஹார்மோனை குறைத்துவிடுவதால் செக்ஸுவல் எண்ணம் குறைஞ்சிடுமில்லையா? அதுவே மிகப்பெரிய தண்டனைதானே?''’’
""குற்றவாளி ஆணின் உடம்பிலுள்ள செக்ஸுவல் ஹார்மோனை குறைப்பதற்கு பயன்படுத்தும் ஹார்மோனுக்கு ஆண்டி ஆண்ட்ரோஜன் என்று பெயர். சைப்ரோ டெரோன் அசிட்டேட், டெபோட் புரவைரா என்கிற ஆண்டி ஆண்ட்ரோஜன்கள்தான் இதற்கு பயன்படுத்துவார்கள். இந்த கெமிக் கலை ஒருமுறை செலுத்துவதால் மட்டும் பாலியல் உணர்வை குறைத்துவிடமுடியாது. மூன்று மாதத்துக்கொருமுறை என தொடர்ந்து வாழ்நாள் முழுக்க குற்றவாளியின் உடம்பில் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏற்கனவே குற்ற வாளிகளுக்கு ஆகும் செலவை விட ஹார்மோன் மருந்துகளின் செலவும் அரசுக்கு கூடுதல் சுமையாகிவிடும். இந்த மருந்தை ஒருமுறை செலுத்திவிட்டு அனுப்பிவிட்டால் அந்த குற்றவாளி மருந்துக்கடைகளில் விற்கப்படும் ஹார்மோன் மருந்துகளை வாங்கி சாப் பிட்டுவிட்டு பழையபடி வந்து விடுவான்'' என்று குற்றவாளிகள் தப்பிப்பதற் கான ஓட்டையை சுட்டிக்காட்ட...
""பாலியல் குற்றவாளிகளின் செக்ஸுவல் ஃபீலிங்ஸை நீக்க நினைக்கும் அரசின் திட்டம் நிறைவேறவேண்டுமென்றால்... வேறு என்னதான் செய்யவேண்டும் டாக்டர்?''
""தொடர்ந்து ஹார்மோனை குறைக்கும் மருந்துகளை கொடுத்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரேயடியாக ஆணுறுப்பை "கட்' (bobbiting) செய்வதுதான் இந்த நோக்கத்துக் கான பெஸ்ட் ஐடியா. அப்படியே செய்தாலும் கூட வக்கிர குணம் படைத்த ஆண் எப்படி வேண்டுமானாலும் ஏதாவது ஒரு ஆயுதத்தை பயன்படுத்தியாவது பாலியல் வன்முறையை செய்யமுடியும். அதனால் வேதியியல் முறை யில் பாலியல் உணர்வை நீக்கி பாலியல் வன் முறையை கட்டுப்படுத்த அரசு நினைப்பது சாத்தியமில்லை'' என்கிறார் அதிரடியாக.
மாற்று வழியை யோசிக்குமா அரசு?
-மனோ