புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013

குவாரி வழக்கில் தலைமறைவாக இருந்த தனது மகன் துரை.தயா நிதிக்கு, முன்ஜாமீன் கிடைத்ததில் இருந்தே அழகிரியிடம் உற்சாகமான உற்சாகம்தான். 
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள் மதியமே விக்கிரமங்கலத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டுக்குப் போன அழகிரி, அங்கு தனது பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் துரைதயாநிதியின் பள்ளி, கல்லூரி நண்பர்கள், சென்னை திரைத்துறை நண்பர்கள் என 70 பேர்வரை அங்கு அழைத்திருந்தார். சிவகாசியில் இருந்து சமையல்காரர்கள் வரவழைக்கப் பட்டு சைவ, அசைவ விருந்து தடபுடலாய்த் தயாரானது. பின்னர் உற்சாகக் கொண்டாட்டத்தோடு நண்பர்கள் புடைசூழ புத்தாண்டைக் கொண்டாடி னார் அழகிரி. விருந்து நள்ளிரவுவரை நீண்டது.


ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணிக்கு தனது விசுவாசிகளை, அழகிரி சந்திக்க ஆரம்பித்தார். தனது மகன் துரைதயாநிதியைத் தன் அருகிலேயே நிற்க வைத்துக்கொண்டார். தேனி, நாகர்கோயில், ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான உ.பி.க்கள் அழகிரியிடம் ஆசிபெற வந்திருந்தனர். அனைவருக்கும் டைரி கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொன்னார் அழகிரி. மதுரையைப் பொறுத்தவரை புறநகர் உ.பி.க்கள் மட்டுமே வந்திருந்தனர். மாநகர உ.பி.க்களில் பெரும்பாலோர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள்  தலை தென்படவில்லை. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வந்தபோது அவர்களுக்கு உபரியாக ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்தார் அழகிரி. இதன்பிறகு 11.15-க்கு நம்மை அழைத்து பேட்டிக்குத் தயாரானார். அப்போது...

நக்கீரன் : உங்கள் ஆங்கிலப் புத்தாண்டுச் செய்தி என்ன?

அழகிரி : இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன் : இந்த ஒன்றரை ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி பற்றி?

அழகிரி: இருண்ட ஆட்சி. எல்லாமே இருளடைந்து கிடக்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி களில் ஒன்றைக்கூட ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்களை முடக்குவதையே தனது சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

நக்கீரன் : மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பதாக ஜெ.’புகார் கூறி வருகிறாரே?

அழகிரி :’ அரசியல் ஆதாயத்திற்காக ஜெ. கூறும் அப்பட்டமான பொய்ப்புகார் இது. தி.மு.க. ஆட்சியின்போது தமிழகத்துக்கு செய்தவைகளையே இப்போதும் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. 

நக்கீரன் : வர இருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என்று ஜெ.’சொல்லியிருக் கிறாரே?

அழகிரி : அது அ.தி.மு.க.வின் முடிவல்ல; ஜெயலலிதாவின் முடிவு. தேர்தலே 2014-ல்தான் வருகிறது. அதற்குள் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம்.

நக்கீரன் :  ஜெ.’பிரதமர் ஆவார் என்று அ.தி.மு.க.வினர் பேசுகிறார்களே?

அழகிரி  : விஜயகாந்த்கூடத்தான் நான் வருங்கால சி.எம். என்றார். அவரால் இந்த அரசு போட்ட நான்கு வழக்கு களைக்கூடத் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. என்னைக் கூடத்தான் வருங்கால சி.எம். என்கிறார்கள். இன்னும் யார், யாரையோ வருங்கால சி.எம். என்கிறார்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுபோலத்தான் ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்பதும் நடக்காத ஒன்று.

நக்கீரன் : கரை வேட்டி சட்டையில் உங்கள் மகன் துரைதயாநிதியின் கெட்டப்பைப் பார்க்கும் போது அவரையும் நீங்கள் அரசியலுக்குக் கொண்டுவரப் போவது போல் தெரிகிறதே?

அழகிரி : ஆமாம். அவரும் தீவிர அரசியலில் ஈடுபடுவார். அதில் எந்தத் தவறும் இல்லை. அவரை நிம்மதியாய் தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள். எனவே அவர் அரசிய லில் தீவிரம் காட்டப்போகிறார்.

நக்கீரன் : துரைதயாநிதி எம்.பி. தேர்தலில் நிற்கப்போகிறார் என்று பேச்சு அடிபடுகிறதே?

அழகிரி : இது பற்றி அவரிடமே கேளுங் கள். அவர் விரும்பி னால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுவார். (அப்போது துரைதயாநிதி நம்மிடம் ""எங்க தாத்தாவைப் பார்த்துதான் எனக்கு கரை வேட்டி கட்டும் ஆசையே வந்தது. அப்பா விரும்பியதுபோல் நடப்பேன். அப்பா என்னை எம்.பி.க்கு நிற்கச் சொன்னாலும் நிற்பேன்''’என்றார்)

நக்கீரன் : இந்தமுறை நீங்கள் எம்.பி. தேர்தலில் நிற்கமாட்டீர்கள் என்றும், சட்ட மன்றத் தேர்தலில் மேலூரில் நிற்கப்போவதாகவும் கூறப்படுகிறதே. நீங்களும் மேலூருக்கு அதிக நிதியை ஒதுக்கியிருக்கிறீர்களே?

அழகிரி : மேலூரில் எனக்கு நீங்கள் சீட் வாங்கிக் கொடுங்களேன். (பலத்த சிரிப்பு)

நக்கீரன் : 2006-ல் எம்.பி. ஆக ஆசை என்று பேட்டிகொடுத்துவிட்டு பின்னர் மறுத் தீர்கள். நக்கீரன், நீங்கள் எம்.பி.க்கு நிற்பீர்கள் என்று சொன்னபோது, மறுப்பு சொன்னீர்கள். ஆனால் நக்கீரன் சொன்னபடிதானே நடந்தது?

அழகிரி : முதலில் எனக்கு அரசியல் பதவி களில் ஆசை கிடையாது. நக்கீரன் செய்திக் குப் பின் கட்சித் தொண்டர்களும் குடும் பத்தினரும் அதை விரும்பினார் கள். நான் எம்.பி. ஆனதும் மத் திய அமைச்சர் ஆனதும் என் தலைவிதிப் படிதான் நடந்தது. இனியும் என் விதி எப்படி கொண்டுபோகிறதோ அப்படி ஆவேன்.

நக்கீரன் : உங்கள் பிறந்தநாள் விளம்பரங்கள் அழிக்கப்பட்டிருக்கிறதே?

அழகிரி : போலீஸை வைத்துதான் அழித்தார் கள். அதேசமயம் பிப்ரவரியில் வரப்போகும் ஜெ.வின் பிறந்தநாளுக்கான விளம்பரங்கள் மட்டும் அப்படியே இருக்கிறது. அதையும் போலீஸ் அழிக்க வேண்டியதுதானே. இது தொடர்பாக போலீஸ் மீது வழக்கு தொடுக்க இருக்கிறோம்.

நக்கீரன்: ஜனவரி 30-ல் வரும் உங்கள் 63-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட இருக்கிறீர்கள்?

அழகிரி: மிக மிக விமரிசையாகக் கொண்டாட இருக்கிறேன். ஏராளமான பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப் போகிறேன். அதில் தலைவர் கலைஞர் கலந்துகொண்டு வாழ்த்தக்கூடும்.

சந்திப்பு : முகில்
படம் : ஸ்டாலின்

ad

ad