புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013


வெறும் 45க்குள் உருண்டு போன நியூசிலாந்து


3வது மோசமான ஸ்கோர்
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 45 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. 2013ம் ஆண்டின் தொடக்கமே நியூசிலாந்து அணிக்கு பெரும் சோகமாக
அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முகாமிட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தொடங்கியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பந்து வீச்சில் நிலை குலைந்து போன நியூசிலாந்து 20 ஓவர் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் சிதறிப் போய் ரசிகர்களை அதிர வைத்தது. அடுத்தடுத்து விக்கெட்கள் விழ, என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழி பிதுங்கிப் போயினர் நியூசிலாந்து வீரர்கள். இறுதியில், 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் பறி கொடுத்து வெறும் 45 ரன்களில் முடிந்து போனது நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ். நியூசிலாந்தின் இந்த பரிதாப நிலைக்கு முக்கியக் காரணகர்த்தா தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்டர்தான். அதிரடியாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்களை ஜஸ்ட் 6 ஓவர்களில் சாய்த்து விட்டார். அவர் வீசிய ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களாகும். கொடுத்த ரன்கள் வெறும் 7 மட்டுமே. இன்னொரு வேகப் பந்து வீச்சாளரான ஸ்டெயின் டோக் பிரேஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்களைச் சாய்த்த பெருமையை சம்பாதித்தார். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை கானே வில்லியம்சன்தான் ஏதோ ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து ஆடி இரட்டை இலக்கத்தைத் தொட்டார். அவர் எடுத்த 13 ரன்கள்தான் அந்த அணி வீரர்களில் ஒருவர் அதிகம் எடுத்த ரன்களாகும். அவ்வளவு கேவலமாக ஆடியது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 12வது குறைந்த ஸ்கோராகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து எடுத்துள்ள முதல் குறைந்தபட்ச ஸ்கோரும் கூட.
மோசமான ஸ்கோரில் நியூசிலாந்தின் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக 26 உள்ளது. அதை எடுத்ததும் நியூசிலாந்துதான் என்பது ஆச்சரியமான ஒற்றுமையாகும்

ad

ad