புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



முற்றுகையிட்ட மக்கள்! பேராவுரணி எம்எல்ஏவான நடிகர் பதறி ஓட்டம்
பேராவூரணி அருகில் உள்ள நாடியம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 78 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் வந்து பேராவூரணி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (05.01.2013) காலை யாருக்கும் தெரியாமல் பேராவூரணி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுவரும் மாண
வ, மாணவிகளை பார்த்தார் நடிகரும், எம்எல்ஏவுமான அருண் பாண்டியன். இவர் பேராவூரணி வந்திருப்பது மக்களிடம் தெரியும் முன்பே அங்கிருந்து கிளம்பி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மாணவர்களை பார்க்கச் சென்றார். 

அப்போது அவரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் நீங்கள் யார்? ஏன் எங்களைப் பார்க்க வந்தீர்கள்? உங்களை தேர்ந்தெடுத்ததால் நாங்கள் என்ன பலன் கண்டோம் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர். இதனால் கோபமாக பதில் ஏதும் சொல்ல முடியாமல் நின்றார். 
இந்த தகவல் தே.மு.தி.க வினருக்கு தெரிந்து முற்றுகையிட்டு கோஷம் போட வந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் அருண்பாண்டியன் அங்கிருந்தும் வேகமாக சென்றுவிட்டார்.
இதுகுறித்து மருத்துவமனையில் கூடியிருந்த பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள் கூறியதாவது, 
தஞ்சாவூர் மாவட்டம் பேராவுரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தே.மு.தி.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் அருண்பாண்டியன். இவர் தோ்தல் பிரசாரத்தின் போது என்னை வெற்றி பெற செய்தால் அரசு ஊழியர்களைப் போல 5 ஆண்டுகளும் உங்களுடன் வாடகை வீடு எடுத்து தங்கி மக்கள் பணி செய்வேன் என்றார். 
ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பக்கம் சில முறைகள் மட்டுமே வந்துள்ளார். இதனால் பேராவூரணி தொகுதி மக்கள் தங்கள் எம்.எல்.ஏவின் முகத்தையே மறந்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களில் இவரும் இருந்தார். தொகுதிக்கு மக்கள் நலத்திட்டங்கள் செய்ய முதல்வரை சந்தித்தோம் என்றும் பேசினார்.
அதன் பிறகும் தொகுதிப் பக்கம் வரவில்லை. புதிய திட்டங்களும் செய்யவில்லை. இப்போது எதற்கு இங்கு வருகிறார் என்று குற்றம் சாட்டினர்.     

ad

ad