புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை! பேச்சுவார்த்தைகள் சுமுகமான உடன்பாடு.- பி.பி.சி 
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் சென்னையில் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும், முன்னேற்றமளிக்கும் வகையிலும் நடைபெற்றது என்று இரு தரப்பு மீனவர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதாகக் கூறப்பட்டு அதன் தொடர்பாக அவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற பிரச்சினைகள் குறித்து இரு தரப்புகளிடையே தீர்வை எட்ட இன்று சென்னையில் காலை 10 மணியிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தமிழகத் தரப்பில் மீன்வளத்துறை அமைச்சர் தனபால், மீன்வளத்துறை செயலர் எஸ்.விஜயக்குமார், மற்றும் மீன்வளத்துறை இயக்குநர் முனியநாதன், தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையிலிருந்து இலங்கை மீனவளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குனர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான அதிகாரிகள் உட்பட 18 பேர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தைகளின் முடிவில், மாலையில், செய்தியாளர்களிடையே, சிறிது நேரம் பேசிய மீனவர் சங்கப் பிரதிதிகள் அருளானந்தம் ( தமிழகம்)  மற்றும் சதாசிவம் ( இலங்கை)  ஆகியோர், இந்தக் கூட்டத்தில் மீன்பிடிப்பது தொடர்பாக சுமுகமான முடிவுகள் எடுக்கப்பட்டன, மனம் விட்டுப் பேசினோம் என்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக முதல்வருக்கும், இரு நாட்டு அரசுகளுக்கும் தெரிவித்து, அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர், செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
மீன்பிடிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, இரு தரப்பிலும், எல்லை தாண்டி மீன்பிடிப்பது உள்ளிட்ட சில தடைகள் உள்ளன. அவற்றையும் விவாதித்து, அரசுகள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார் அருளானந்தம்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், சிறைப்பிடிப்பதையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ad

ad