புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

தரவரிசையில் இந்தியா 2-வது இடம்: மீண்டும் ஆஸ்திரேலியா முதலிடம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு
முன்னேறியது.
நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததும், தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. ஆஸ்திரேலியா முதலிடம் பெற்றது. பின், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதேசமயம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் "டை' ஆனது. எனவே இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4-1 என தொடரை வென்றது. இதனால் இந்திய அணி மீண்டும் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 118 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கலாம். ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று, மற்றொரு ஆட்டத்தில் தோல்வி அடையும் பட்சத்தில் 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கும். இரண்டிலும் தோல்வி அடைந்தாலும் தரவரிசையில் இந்திய அணி பின்தங்காது. ஆனால், 115 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.
தற்போது இங்கிலாந்து அணி 109 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-வது இடத்தில் உள்ளது.

ad

ad