புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர்
முரளிதரராவ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.வண்டலூரில் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திமோடியின் பொதுக்கூட்டம் தொடர்பாக இரு கட்சியினரும் ஆலோசனை நடத்தினர் கூட்டத்துக்குப் பிறகு வைகோ கூறியதாவது:
1998-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இடம்பெற்றிருந்தோம். ஆனால் 2004ல் தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டணியில் இருந்து விலகினோம்.அதேசமயம், குறிப்பிட்ட ஒரு கட்சியால் கமலாலயம் தாக்கப்பட்டபோது, மதிமுக தொண்டர்கள் கமலாலயத்துக்கு நேரில் வந்து, பாஜக நிர்வாகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.அந்த அளவுக்கு எங்களுக்குள் எப்போதும் தொடர்பு இருந்து வருகிறது.வண்டலூரில் நடைபெறும் நரேந்திரமோடியின் பொதுக் கூட்டத்தை மிகப்பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக ஓர் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் கோரியுள்ளோம்.
என் அரசியல் அனுபவத்தின்படி சொல்கிறேன். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. திருச்சியில் நடைபெற்ற கூட்டம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.  அதைவிட அதிகமாக வண்டலூர் கூட்டம், தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள், அரசியலைச் சாராதவர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் திரளாக நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பலரது கணக்குகளை முறியடித்து மாபெரும் வெற்றியைப் பெறும். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் வைகோ.

ad

ad