புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

அந்தமானில் படகு கவிழ்ந்து விபத்து: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 21 பேர் சாவு

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 45 பேர் ரோஸ் தீவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நேரிட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் 21 பேர் உயிரிழந்ததை தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது.
உயிரிழந்தவர்களில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் பெயர் விவரம்: செல்வராஜ், கணபதி, பெருமாள், சுசீலா, உஷா, சாந்திபாய், தர்ஷினி, சாந்தா.
மீட்புப் பணியில் கடலோரக் காவல் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய படகில், 45 பேர் பயணம் செய்ததே, விபத்துக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த தெற்கு அந்தமானின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் இரங்கல்: படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்தியப் படைகள் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ad

ad