புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வட மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
வடமாகாண சபையின் 5வது அமர்வு இன்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்த பிரேரணையினை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் கலந்து கொள்வதற்கு
சபையினால் ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அனந்தி சசிதரனினால் ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்குச் செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புக்கு ஒப்பான செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை சபையில் முன்வைத்தார்.
அதனையடுத்து இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,
இந்த விடயம் தொடர்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராகவும் காணாமல் போனவர்கள் குறித்தும் சரியான தகவல்களை வழங்கிட சகோதரி அனந்தி தகுதியானவர் என நினைக்கின்றேன் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட சபை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு அனந்தி சசிதரனுக்கு அனுமதியளிப்பதாக அவைத்தலைவர் சிவஞானம் அறிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அனந்தி,
அனந்தி மட்டுமல்ல இன்னும் பல உறுப்பினர்கள் அங்கு செல்ல வேண்டும் என்றார்.
எனினும் அதற்குப் பதிலளித்த அவைத்தலைவர்,
அது மாகாண சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள். இதனால் அவற்றை தீர்மானமாக பிரேரிக்க முடியாது. எனினும் அவர்களது தீர்மானத்தின் படி அவர்கள் ஜெனீவா செல்லலாம் என்றார்.
இதேவேளை குறித்த பிரேரணை உள்ளிட்ட 3 பிரேரணைகளை அனந்தி இன்று சபையில் முன்மொழிந்திருந்ததுடன் அவையும் சபை அங்கீகாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad