புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜன., 2014

    ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினர் இடையே தள்ளு, முள்ளு

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசுதின விழாவில், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கையில் கோஷமிட்டதில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளுவில் முடிவுற்றது.

65வது குடியரசு தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நகர காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன், பொதுச்செயலாளர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, ராஜாசம்பத்குமார், வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், பொதுச்செயலாளர் கே.நாகராஜன், மாணவர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், பாட்டில் வெங்கடேசன், பழனி மற்றும் மகளிரணியினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் காந்திசிலை, ராஜீவ்காந்தி சிலை மற்றும் காமராஜர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தள்ளு, முள்ளு: சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது வாசன் ஆதரவாளர்கள் ராதா, மக்கீன், வைத்தி, இரும்பு ஆறுமுகம், கோ.குமார் ஆகியோர் ஜி.கே.வாசன் வாழ்க என கோஷமிட்டனர். அதற்கு ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் வெங்கடேசன், பழனி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாசன் வாழ்க என கோஷமிடக் கூடாது எனக் கூறியதாக தெரிகிறது.  அதற்கு வாசன் ஆதரவாளர்கள்  ஆகியோர் நீங்கள் வேண்டுமென்றால் சிதம்பரம் வாழ்க என கோஷமிடுங்கள். எங்களை கோஷமிடக்கூடாது என எப்படி சொல்லலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடுத்து இரு கோஷ்டியினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் இரு தரப்பினைரயும் தடுத்து அனுப்பி வைத்தனர்.