புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

நெருக்கடியில் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை
news
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்கடிகளை இலங்கையில் எதிர்நோக்க நேரிடும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜெனீவா பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.


அண்மையில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களை மோசமாக பாதிக்கும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் நேரடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படக் கூடிய அபாயம் நிலவி வருகிறது.

அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளானது சாட்சியாளர்கள் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகளில், இலங்கை குறித்த வாய்மொழி மூல அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜெனீவா பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ad

ad