புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

ரூ.50 இலட்சம் கொள்ளைச் சூத்திரதாரி உட்பட ஆறுபேர் கைது: ரூ 42 இலட்சத்து 32,000 மீட்பு

18 மணிநேரத்தினுள் பொலிஸ் அதிரடி
மத்துகமவில் இடம்பெற்ற தனியார் லீசிங் நிறுவனத் தின் 50 இலட்சம் ரூபா கொள்ளையின் பிரதான சூத்திர தாரியான பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரி உட்பட 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் 42 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கொள்ளை இடம்பெற்று 18 மணிநேரத்துள் பிரதான சூத்திரதாரி உட்பட சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்வதற்கு பொலிஸாருடன் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் தெரிவித்தார். தனியார் லீசிங் நிறுவனத்திலிருந்து தினமும் பணம் கொண்டு செல்வது தொடர்பாக பாதுகாப்பு பிரி வின் பிரதம அதிகாரியின் சகோதரரான தச்சுத் தொழிலாளியான நபருடன் சேர்ந்தே இக் கொள்ளையை திட்டமிட்டுள் ளமை யும் தெரிய வந்துள் ளது என்றும் கூறி னார்.
மூடிய தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பொரலஸ் கமுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர், பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இருவரையும் பொலிஸார் தேடிவந்தனர். 21 வயதான துமிந்து சங்கல என்ற நபரும். 20 வயதான சஜான் சுசான் பெரேரா என்ற நபருமே பொரலஸ்கமுவ வீடொன்றில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 2 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, அன்றைய தினம் பணம் எடுத்து சென்ற பாதுகாப்பு பிரிவு வானுக்கு பொறுப்பாகவிருந்த தலைமை பாதுகாப்பு அதிகாரி 50 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள் ளதாக பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளார்.
குறித்த இரு சந்தேக நபர்களிடமும் விசாரணை செய்தபோது பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள தச்சுத் தொழிலாளி ஒருவரே தங்களை கொள்ளையிட அழைத்ததென்றும் பணத்தை கொண்டு செல்பவர் தனது சகோதரன் என்றும் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது. பணத்தை எடுத்துச் செல்வது தான் உங்கள் வேலை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவதினம் பாதுகாப்பு வானுக்கு பின் புறமாக வேனை பின் தொடர்ந்து டிமோ பட்டா வாகனத்தில் தச்சுத் தொழிலாளியும் பின் தொடர்ந்தும் வந்து தொலைபேசி மூலம் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார், இவ்வாறு தச்சுத் தொழிலாளி 38 தொலைபேசி அழைப்புகளை குறித்த நபருக்கு எடுத்துள்ளமையும் பதிவாகியுள்ளது.
50 இலட்ச ரூபா கொள்ளையடிக் கப்பட்டாலும் 2, 32, 000 ரூபா மட்டுமே மீட்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டபோது 10 இலட்சம் ரூபாவில் 5 இலட்சம் ரூபா தச்சுத் தொழிலாளிக்கு கொடுத்துள்ளதாகவும் மிகுதி வேறு ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
எனினும். 50 இலட்ச ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில் மிகுதி 40 இலட்ச ரூபா தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த தலைமை பாதுகாப்பு அதிகாரி தான் பயணம் செய்த வாகனத்தினுள் மிகுதி 40 இலட்ச ரூபாவையும் மறைத்து வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

ad

ad