புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மனைவியிடமிருந்து உத்தியோகபூர்வமாக விவாகரத்து.30 வயது முன்னாள் ஒலிம்பிக் அழகி வீராங்கனையுடன் காதல் பிரச்சினை 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் பிரிவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 வயதான முன்னாள் ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கணையான அலினா கபயெவாவுடன் இரகசிய காதல் தொடர்பைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரது திருமண வாழ்வு முறிவடையலாம் என கடந்த பல வருடங்களாக ஊகிக்கப்பட்டு வந்தது.
லையுட்மிலாவுடனான விவாகரத்தை புட்டின் உறுதிப்படுத்தியதையடுத்து அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்த லையுட்மிலாவின்  (56 வயது) சுயவிபரங்கள் அகற்றப்பட்டிருந்தன.
புட்டினின் இரு மகள்மார் என மரியா மற்றும் கதரினாவின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
புட்டினும் லையுட்மிலாவும் 1980களில் லெனின்கிரேட் ஸ்ரேட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற வேளை ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் கொண்டனர். 
அவர்கள் 1983ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். அவர்களது முதலாவது மகளான மரியா 1985 ஆம் ஆண்டிலும் இரண்டாவது மகள் கத்தரினா 1986 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

ad

ad