புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

பிரதேச சபை தீர்மானத்துக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் கண்டனம்
வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு  எதர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர் சங்க தாய்ச் சங்கம்  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



நேற்று முன்தினம் வலி.வடக்கு பிரதேச சபையில்  சுகாதார நிர்வாக அதிகாரங்கள் யாவும் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றுவதில்லை எனவே அவரை இடமாற்றம் செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.


இவ்வாறு குறித்த அதிகாரியை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது தவறானது என அரச மருத்துவர் தாய்ச் சங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மேலும் குறித்த தீர்மானம் அந்த பிரதேச சபையின் அறியாமையையும் முதிர்ச்சியின்மையையும் எடுத்துக் காட்டுவதாக கடுமையாக அறிக்கையில் சாடப்பட்டுள்ளது.

மத்திய அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராக பிரதேச சபைகள் அவ்வாறான தீர்மானங்களை எடுக்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad