புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014





2005–ம் ஆண்டு உலக தடகள போட்டியின் முடிவு மாற்றியமைப்பு இந்திய வீராங்கனை அஞ்சுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது

2005–ம் ஆண்டு மான்ட் கார்லோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ரஷியாவின் தாத்யனா கோடோவா (6.83 மீட்டர்) தங்கப்பதக்கமும், இந்தியாவின் அஞ்சு ஜார்ஜ் (6.75 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

இந்த நிலையில் தாத்யனா கோடோவாவிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கடந்த ஆண்டு மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது,  ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தகுதி நீக்கப்பட்டு அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த ஆட்டத்தின் முடிவினை சர்வதேச தடகள சம்மேளனம் நேற்று அதிகாரப்பூர்வமாக திருத்தி வெளியிட்டது. இதன்படி 2–வது இடத்தை பிடித்த அஞ்சு ஜார்ஜ் தங்கப்பதக்கத்திற்கு உரியவராகியிருக்கிறார். இது குறித்து இந்திய தடகள சம்மேளன தலைவர் அதில்லே சுமரிவாலா கூறுகையில், ‘கவுரமிக்க இந்த போட்டியில் அஞ்சு ஜார்ஜூக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும், தடகளத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு’ என்றார்.
அஞ்சு ஜார்ஜ் கூறும் போது, ‘தங்கப்பதக்கத்தை நான் பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். ஒரு தடகள வீராங்கனையாக எனது ரசிகர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய தடகள சம்மேளனத்திற்கு நன்றி கடன் பட்டுள்ளேன்’ என்றார். உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கத்தை ருசித்த முதல் இந்தியர் அஞ்சு ஜார்ஜ் ஆவார்.

ad

ad