நம்பி நம்பி ஏமாந்தவர்தான் வைகோ: விஜயகாந்த் பேச்சு
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்களப் பெருமக்களே, தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு பெரும் படை கருவியாக, 39 தொகுதிகளிலும் வெற்றி குவிவதற்கு காரணமாக என் அன்பு சகோதரர், புரட்சி கலைஞர் எனக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறார். இருகரம் கூப்பி வரவேற்கிறேன். வருக. உரை தருக. நன்றி வணக்கம் என்றார் வைகோ.
தொடர்ந்து விஜயகாந்த் பேசுகையில், மஞ்சள்காமாலை நோய்க்காக சொந்த காச செலவு பண்ணி, உங்களுக்கு வைத்தியம் பார்த்தார் வைகோ. ராணுவ வீரர்களுக்கு தொழுகை நடந்த நேரம் ஒதுக்க வேண்டும் என்று, முதல் முதலாக முஸ்லீம்களை அழைத்துக்கொண்டு போய் ராணுவ வீரர்களுக்காக வாஜ்பாய்யிடம் பேசியவர். ஆக அப்படிப்பட்டவருக்கு வாக்கு சேகரிக்க வருகிறேன் என்றால் எனக்குள் அப்படி ஒரு சந்தோஷம். என்னைவிட மூத்தவர். அரசியலில் மூத்தவர். அவருக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன் என்றால் எனக்கு இதைவிட வெற்றி வேறு என்ன இருக்கு. விருதுநகர் வி, வைகோ வி, வெற்றி வி, வாக்கு சேகர்க்க வந்த நான் வி ஆக வைகோ வெற்றி பெறுவார்.
சிவகாசியில் அதிகமாக பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி ஆகின்றன. அதனை தடுப்போம். நரேந்திர மோடியிடம் நாங்கள் எடுத்துச் சொல்வோம். நான் போறேனோ இல்லையோ, வைகோ சொல்வார். ராஜீவ்காந்தியை கைநீட்டி பேசியவர்தான் வைகோ. பாராளுமன்றத்தையே கதிகலங்க வைத்தவர் வைகோ. நம்பி நம்பி ஏமாந்தவர்தான் வைகோ அவர்கள். இன்று மக்கள் நிச்சயமாக கரைசேர்ப்பார்கள் என்று உங்களை நம்பி வந்திருக்கிறார். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்