புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

இந்திய வம்சாவளி  மொறிசியஸ் மாணவியான யாஷிகா இன்று இரவு 9 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
மொறிசியஸ் நாட்டைச் சேர்ந்த யாஷிகா லண்டனில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்ததை அடுத்து அவர் இன்று நாடு கடத்தப்பட்டார் 


மேற்படி மாணவி 2011ம் ஆண்டு தனது தாயாரோடும் தனது சகோதரர்களோடும் லண்டனுக்கு வந்துள்ளதை அடுத்து லண்டனில் அகதி அந்தஸ்து கேட்டு விண்ணபித்திருந்துள்ளார்.

யாஷிகாவின் அகதி அந்தஸ்து விண்ணப்பத்தை பரிசீலித்த பிரித்தானிய உயர்ஸ்தானியகம், மொறிசியஸ் இல் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எதற்காக லண்டனில் அகதி அந்தஸ்து கோருகிறார் என நிராகரித்தது.

யாஷிகாவை நாடு கடத்தப்படும் என கடந்த 30ம் திகதி அறிவித்ததையடுத்து அவரை நாடு கடத்த வேண்டாம் என 175000 கையெழுத்துக்கள் அனுப்பப்பட்டும் அவர் இன்று நாடு கடத்தப்பட்டார் 

இன்று இரவு 9:00 மணிக்கு மொறிசியஸ்க்கு புறப்படும் விமானத்தில் நாடுகடத்தப்படவுள்ள யாசிகாவை விமான நிலையத்துக்கு கூட்டிச்செல்லப்பட்டபோது மிகவும் கவலையோடு இருந்துள்ளார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad