புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

பொதுவேட்பாளராக தமிழர் வருவது முடியாத காரியம் - நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் 
பொதுவேட்பாளராக தமிழர் ஒருவர் பெரும்பாண்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பொதுவேட்பாளராக வருவதென்பது முடியாத காரியமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
தொழிற்சங்கத் தலைவர்  ஏ. அஸீஸின் 24 ஆவது நினைவு தினக் கூட்டம் கொழும்பு செடக் நிறுவனக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இலங்கையில் சிறுபான்மையினருக்கு நடைமுறையில் அடையாள ரீதியான ஏதாவது அங்கீகாரமாவது கிடைக்காமல் இருப்பது கவலைக்குரியது. 
 
ஒரு பிரதமர் பதவியாவது சிறுபான்மை மக்களுக்கு கிடைக்குமாக இருந்தால் ஒரு ஆறுதலாக இருக்கும். முன்னர் பிரதம நீதியரசராக தமிழர்கள் இருந்துள்ளனர். ஆனால், இன்றுள்ள நிலைமையில் ஒரு பிரதம நீதியரசர் பதவியை சிறுபான்மையினருக்கு விட்டுக் கொடுக்க பயப்படுவார்கள். 
 
இது எப்படிப் போனாலும் சபாநாயகர்களாக முன்னர் சிறுபான்மையினர் இருந்துள்ளனர். தற்பொது அதைத் தானும் சிறுபான்மையினருக்குக் கொடுக்க முன்வரமாட்டார்கள். 
 
சகல பதவிகளினதும் அதிகாரங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பறிக்கப்பட்டு ஒரு மையத்தில் குவிக்கப்பட்டுள்ளது என்பது தான் இன்றுள்ள எல்லா சமூக சிந்தனையாளர்களினதும் பிரச்சினை என்பது மட்டுமல்ல, எல்லா புத்திஜீவிகளும் இதைத் தான் கதைக்கிறார்கள் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
 

ad

ad