புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014



ரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டுக்கார்களை வாங்கித்தரும் கில்லாடி புரோக்கர் சி.பி.ஐ. வசம் சிக்கியதால், காரை வாங்கிய புள்ளிகள், சிக்கலில் சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

யார் அந்த வரி ஏய்ப்பு கார் புரோக்கர்?

அலெக்ஸ். 60-வயதை தொட்டுக்கொண்டிருக்கும் இந்த கில்லாடி புரோக்கர், கேரள மாநிலத்தின் மிக பின்தங்கிய மாவட்ட மான பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர். கார் மெக்கானிக் வேலைக்காக தனது 20 -வது வயதில் துபாய்க்குப் போன அலெக்ஸ், இன்று  வரி ஏய்ப்பு கார் விற்பனையில் நம்பர் ஒன் ஆளாகத் திகழ்கிறார். துபாயில் ஒரு பெரிய கார் ஷோரூமை  தொடங்கும் அளவிற்கு, அந்த தொழில், கோடிகோடியாய் கொட்டிக் கொடுத்திருக்கிறது.

துபாயிலிருந்து கேரளா திரும்பும் தொழிலாளர்கள், துபாயில்  சொகுசுக் கார் வாங்கி உபயோகப்படுத்தினார்கள் என போலியாக ரெக்கார்டுகளைத் தயார் செய்வார். அந்தக் கார் கப்பலில் பயணம் செய்து மும்பை, மங்களூர், கொச்சின் என அரபிக்கடல் துறைமுகங்களில் வந்து இறங்கும். உபயோகப்படுத்திய காருக்கு வரி குறைவு என்பதால் அந்தக் காரை குறைவான விலைக்கு விற்பார் அலெக்ஸ். 

இது குறித்து வந்த புகாரை விசாரிக்க, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரி முருகானந்தம், அலெக்ஸிடம் பேசினார். அவரையே  தனது தொழில் பார்ட்னராக ஆக்கிக்கொண்டார் அலெக்ஸ். 2004-ஆம் ஆண்டு முதல் 2013 வரை 33 கார்களை இறக்குமதி செய்து பல வி.வி.ஐ.பி.க்களுக்கும் விற்றிருக்கிறார். குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஹீரோ அமி தாப்பச்சன் குடும்பம் தொடங்கி, சல்மான் கான், அமீர்கான் போன்ற இந்திய நட்சத்திரங்களுக்கும், நடிகை ஸ்ரீதேவி,  மம்முட்டி, உதயநிதி ஸ்டாலின் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்களுக்கும், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், ராமச் சந்திரா கல்லூரி சேர்மன் வெங்கடாசலம் போன்ற தொழிலதிபர்களுக்கும் அலெக்ஸ் கார் சப்ளை செய்திருக்கிறார்.

அலெக்ஸ்-முருகானந்தம் இணைந்து செய்த வியாபாரத்தால், அரசுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் என 2013-ஆம் ஆண்டு தெரிந்துகொண்ட சி.பி.ஐ., முருகா னந்தத்தை விசாரித்தது. உடனே அப்ரூவர் ஆன முருகானந்தம் ஒப்பித்த தகவலின் பேரில், 2013 ஆகஸ்ட் 8-ம் தேதி அலெக்ஸ் மற்றும் முருகானந்தத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, அலெக்ஸை தேட ஆரம் பித்தது சி.பி.ஐ. 6 மாத காலம் தலைமறை வாக ஆட்டம் காட்டிய அலெக்ஸை, 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி அமுக்கியது சி.பி.ஐ. 

ஜெகஜ்ஜால கில்லாடியான அலெக் ஸிடம் எப்படி விசாரணை நடத்தப்பட்டது என்பதை நக்கீரனே சொன்னதே என்ற, அந்த சி.பி.ஐ. அதிகாரி... ""நாங்கள் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைப் பற்றித்தான் அதிகம் கேட்டோம். உதயநிதி ஸ்டாலினை பார்த்திருக்கிறாயா? என்கிற கேள்விக்கு "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் பார்த்தேன் என கூலாக பதில் சொன்னார். ஸ்டாலினைத் தெரியுமா? என கேட்டதற்கு, "தெரியுமே... அவர் தமிழ்நாட்டின் துணை முதல்வர் என டி.வி.யில் பார்த்திருக்கிறேன்' என சிரித்துக்கொண்டே சொன்னார். பிறகென்ன, எங்கள் டீம்  பலமாக ’கவனித்தது’. இதை கடந்த மார்ச் 5-ந் தேதி வெளியான நக்கீரனில் ‘ஸ்டாலினுக்கு நெருக்கடி! தி.மு.க.வை மிரட்டும் சி.பி.ஐ’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தீர்கள்''’ என்று தனது நினைவை பகிர்ந்துகொண்டார். 

ஸ்டாலினை ஏன் சி.பி.ஐ.  குறிவைத்தது என்பது பற்றி விசாரித்தோம். ""ரெட்ஜெயண்ட் மூவிசுக்கு ஃபைனான்ஸ் செய்யும் ஃபைனான்ஸியர் ஒருவரிடம், ஒரு வெளிநாட்டுக் கார் வேண்டும் என சொல்லியிருக்கிறார் உதயநிதி. அந்த ஃபைனான்ஸியர், மும்பையில் டீலரான நிப்பின் என்பவரிடம் பேசினார். உதயநிதி கேட்ட வெளிநாட்டுக் கார் வர கால தாமதமாகிவிட, புதிய கார் வரும்வரை தான் ஓட்டிக் கொண் டிருந்த ரேஞ்ச் ரோவர் காரை தந்து விட்டார் நிப்பின். 


உதயநிதியிடமிருந்து அந்தக் காரை ஓட்டிப் பார்த்தார் ஸ்டாலின்.  ’இந்தக் காரே நல்லா இருக்கு. வேறு கார் வேண்டாமென ரேஞ்ச் ரோவரை பயன்படுத்த ஆரம்பித்தார் ஸ்டாலின். உடனே உதயநிதி அந்தக் காரின் ரெக்கார்டுகளை வாங்கி, அவர்கள் குடும்பத்துக்கு நெருக்கமான கஸ்டம்ஸ் உயரதிகாரியிடம் காட்டி, இதை வாங்கலாமா? என கேட்க, தாராளமாக வாங்கலாம் என்றார் அதிகாரி. அவரது ஆலோ சனைப்படி அந்தக் காருக்குச் செலுத்த வேண்டிய வரிகளை யெல்லாம் முறையாக கட்டிவிட்டுக் காரை வாங்கினார்கள். இருந்தும் "நீங்கள் வாங்கிய வெளிநாட்டுக் காருக்கு முறையாக வரி செலுத்தப்படவில்லை' என மத்திய வருவாய் புலனாய் வுத்துறை சினிமா ஃபைனான்சியரிடம் கேள்வி கேட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர் காருக்கும், இறக்குமதி வரி கட்டுவதற்காக கொடுத்த செக்குகளையும் காட்டி, விளக்கம் அளித்துவிட்டு காரையும் அங்கேயே விட்டுவிட்டு வந்தார். எல்லாம் சரியாகத் தான் இருந்தது என  நாங்கள் நம்பிக்கொண்டிருந்த வேளை யில், ராமச்சந்திரா மருத்துவ மனை சேர்மன் வெங்கடா சலம் கைது, புதுப்புயலை கிளப்பியிருக்கிறது'' என்றார் கள்.

ஏன் வெங்கடாசலத்தை கைது செய்தீர்கள்? என அலெக்ஸ் வழக்கின் புலனாய்வு அதிகாரியான அப்துல் அஜீசிடம் கேட்டோம்.

""அலெக்ஸ் விற்ற 33 கார்களில் 24 கார்கள் வரியை ஏமாற்றி முறைகேடாக விற்கப் பட்ட கார்கள் என கண்டு பிடித்தோம். அதில் அதிக எண் ணிக்கையாக 8 கார்களை வெங்கடாசலம் வாங்கியிருக் கிறார். அவருக்கு சம்மன் அனுப்பிக் கூப்பிட்டபோது, அவர் ஒத்துழைக்கவில்லை. அதனால் மே 5-ந் தேதி மாலை 3 மணிக்கு அவரை எங்களது அலுவலகத்திற்கு வரவழைத் துக் கைது செய்தோம். அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் ரெய்டு செய்து, அவர் அலெக் ஸிடம் வாங்கிய 8 கார்களின் ஆர்.சி. புத்தகங்களைக் கைப் பற்றியுள்ளோம்'' என்றார்.

கூட்டு சதி, ஏமாற்றுதல் என ஏழு செக்ஷன்களில் வெங்கடாசலத்தின் மேல் வழக்குகள் பாய்ந்தது.  சி.பி.ஐ. அலுவலகத்திலிருந்து சென்னை சி.பி.ஐ. கோர்ட் நீதிபதியான ஜானகிராமனின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். வழக்கறிஞர்கள், அவருக்கு இதயகோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை உள்ளது. அவரை மருத்துவமனை செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர். வெங்கடாசலமும் தனக்கு மயக்கமாக இருக்கிறது என்றார். அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தநாளே வெங்கடாசலத்திற்காக ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி. அதற்கு போட்டியாக அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்தார் சி.பி.ஐ. வழக்கறிஞர் .ஜெயேஷ். இரண்டு மனுக்களும் 7-ம் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

சி.பி.ஐ. வழக்கறிஞரோ ‘""வெங்கடாசலத்தின் உடல்நிலை, சீராக உள்ளது என மருத்துவ அதிகாரிகள் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.. இந்த வழக்கில் அலெக்சுடன் சேர்த்து குற்றம்புரிந்துள்ள வெங்கடா சலத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது'' என்றார். வெங்கடாசலத்தின் வழக்கறிஞரோ ""வெங்கடாசலம் ரகசியமாக கார்களை வாங்கவில்லை. அவரது கம்பெனி சார்பில் வங்கி செக்குகளை கொடுத்துத்தான் வாங்கியுள்ளார். அவர் 8 வெளிநாட்டுக் கார்களை வாங்கியதாக சொல்கிறார்கள். அதில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி யான மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரி முருகானந்தத்தையே கைது செய்யாத சி.பி.ஐ., வெங்கடாசலத்தை கைதுசெய்ததின் பின்னணியில் சந்தேகம் உள்ளது. மற்றொரு குற்றவாளியான அலெக்சுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், வெங்கடாசலத்தை ஏன் ஜாமீனில் விடுவிக்கக்கூடாது?''’ எனக் கேள்வியெழுப்பினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜானகிராமன், சி.பி.ஐ. கோரிக்கையான போலீஸ் கஸ்டடி விசாரணையையும், வெங்கடாசலத்தின் கோரிக்கையான உடனடி ஜாமீனையும் தரமுடியாது என மனுவை டிஸ்மிஸ் செய்தார்.

8-ந் தேதி வெங்கடாசலத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் முன் வந்தது. அப்போது நீதிபதி  ""பழைய கார்களை வாங்கியதில் வெங்கடாசலம் இறக்குமதி வரி கட்டவில்லை என்கிறீர்கள். அவர் வரிகட்டத் தயார் என்கிறார். அதற்காக அவரை ஏன் கைதுசெய்ய வேண்டும்?''’ என சி.பி.ஐ. தரப்பைப் பார்த்துக் கேள்வி எழுப்பியதோடு,  வெங்கடாசலத்துக்கு உடனடியாக ஜாமீனை வழங்கினார்.

அடுத்தது என்ன என சி.பி.ஐ. வழக்கறிஞர் ஜெயேஷிடம் கேட்டோம். ""மொத்தம் 24 கார்கள் முறைகேடாக இறக்குமதி செய்து விற்கப்பட்டுள்ளது. ஒரு காருக்கு ஒரு வழக்கு என 24 வழக்குகளை போட்டிருக்கிறோம். அதில் முதல் கட்டமாக வெங்கடாசலம் வாங்கிய 2 கார்களுக்கு இரண்டு தனிவழக்கு பதிவு செய்து, அதில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருக்கிறோம். மற்ற கார்களை வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எப்போது வேண்டுமானாலும் சி.பி.ஐ. கைது செய்யலாம்'' என சஸ்பென்ஸ் வைத்தார்.

அடுத்த பரபரப்புக் காட்சிகள் விரைவில் அரங்கேறும் என்று தெரிகிறது.   

ad

ad