புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

பஞ்சாப்பை வென்றது கொல்கத்தா 
பஞ்சாப்-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் இன் 34 ஆவது ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பஞ்சாப் அணிக்கு வழங்கியிருந்தார்.

 
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் (8) விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை தனக்கான வெற்றி இலக்காக நிர்ணயித்ததது கொண்டது.
 
 
 
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வீரர்கள் தமது துடுப்பாட்டத்தில் பெரிதாக பிரகாசிக்கவில்லை.
அதிகப்படியான சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை இன்றைய ஆட்டத்தில் சேவாக் மாத்திரம் பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
வீரேந்திர சேவாக் 50 பந்துகளுக்கு முகம் கொடுத்து 1 சிக்ஸர் அடங்களாக 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
                                                               
 
கொல்கத்தா அணி சார்பாக அதிரடியான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தார் சாவ்லா. இவர் 4 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களை கொடுத்து பஞ்சாப் அணியின் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
 
                                                               
 
 
 
பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள்  18 ஓவர்கள் நிறைவில் தனது பொறுமையான துடுப்பாட்டம் மூலம் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 150 என்ற வெற்றி இலக்கை அடைந்து  கொண்டனர்.
 
இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரையில் கொல்கத்தா வீரர்கள் தமது பொறுமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தமையை அவதானிக்க முடிந்தது.
கொல்கத்தா அணி சார்பாக களமிறங்கிய வீரர்களில்..
 
கௌத்தம் கம்பீர் ஆட்டம் இழக்காமல் 45 பந்துகளில் 63 ஓட்டங்களையும்..
 
                                                               
 
RV உத்தப்பா 28 பந்துகளில் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 1 சிக்ஸர் அடங்களாக 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
          
                                                               

ad

ad