புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014





தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணி ஆகியவைகள் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸின் வெற்றி எப்படி இருக் கிறது? நீங்களும் நாற்பதிலும் ஜெயிக்கிறீர்களா?


மிதமிஞ்சிய கற்பனையில் இருக்கின்றன இந்த கட்சிகள். நாற்பதிலும் ஜெயிப்போம் என்பதை யெல்லாம் இந்த கட்சிகள் வழக்கமாக சொல்லி வருபவைதான். இப்படிப்பட்ட எண்ணிக்கைக் கணக்கில் எப்போதும் காங்கிரஸ் கற்பனா உலகத்தில் சஞ்சரித்ததில்லை. எங்களின் வலிமை எங்களுக்குத் தெரியும். 1998-க்குப் பிறகு தனித்து களம் காணும் வாய்ப்பு இந்த தேர்தலில் காங் கிரசுக்கு கிடைத்தது. இது காங்கிரஸ் தொண்டர் களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், வீட்டில் முடங்கி கிடந்த காங்கிரஸ் காரர்கள் வீரியமாக வீதிக்கு வந்தனர். அவர்களிடம் அப்படி ஒரு எழுச்சி. இதை தேர்தல் சுற்றுப்பயணத்தில் நிறையவே நான் பார்த்தேன். குறுகிய காலத்தில் திடீரென கிடைத்த வாய்ப் பைப் பயன்படுத்தி தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் எங்கள் தொண்டர்கள். நிச்சயம் சில வெற்றிகள் எங்களுக்கு கிடைக்கும். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வாங்கும் வாக்கு கள்தான் திராவிட கட்சிகளின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கூடியதாக இருக்கும்.

காங்கிரஸுக்கு சில தொகுதிகள் கிடைக்கு மென நம்பும் நீங்கள், பிரதான கட்சிகளுக்கு எத்தனை சீட் கிடைக்குமென கணக்கிட்டிருக் கிறீர்கள்? 


தமிழகத்தில் இதுவரை இரண்டுமுனை போட்டிதான் தேர்தல் களத்தில் இருந்தது. முதன்முறையாக இந்த முறை 4 முனைப் போட்டி. அந்த வகையில், வாக்குகள் எப்படிப் பிரியும்? பிரியும் வாக்குகள் எந்த கட்சிக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? புதிதாக அறிமுகமாகியிருக்கிற நோட்டா சிஸ்டத்திற்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதையெல்லாம் அலசுகிற ஒரு வினோதமான தேர்தல். அதனால் மிகச்சரியாக கணிப்பது கடினம். ஆனாலும், எந்த கட்சி வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்குகளிலேயே வெற்றி பெறுமென்பதே எங்கள் கணக்கு.


இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணி வலிமை பெற்றது தான் காங்கிரஸை பலவீனப்படுத்தியதாக சொல்கிறார்களே? 

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய 4 கட்சிகள்தான் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள். மற்றவை எல்லாம் சில தொகுதிகளிலும் சில பகுதிகளி லும் வாக்குகளை வைத்திருப்பவை. அத்தகைய கட்சிகளை வைத்துதான் பா.ஜ.க. கூட்டணி அமைத்தது. மேலும், தமிழகத்தில் பா.ஜ.க.வுக் கென்று எந்த ஒரு தொகுதியிலும் தனித்த பெரும்பான்மை செல்வாக்கு இருந்த தில்லை. அதனால், தே.மு.தி.க.வைத் தவிர பா.ஜ.க.வோடு சேர்ந்த கட்சிகளால் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதால் பா.ஜ.க. அணி வலிமையானது என்கிற கருத்தே தவறானது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள், முந்தைய தேர்தல்களை ஒப்பிடும் போது வாக்குகள் சற்றுகூடுதலாக பெறலாமே தவிர பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. அதனால் பா.ஜ.க. அணியால் காங்கிரஸ் பலகீனமாகிவிட்டது என்கிற கருத்து ஏற்புடையது அல்ல. அது, கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். 

திராவிட கட்சிகளுக்கு உள்ள பிரச்சார வலிமையும் பிரச்சார வியூகங்களும் காங்கிர சிடம் இல்லாதபோது, உங்களுக்கு எங்கே வெற்றி கிடைக்கப் போகிறது?


பிரச்சார வலிமை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக, பொருளா தார வலிமை, ஊடகங்கள் வலிமை, 47 ஆண்டு கள் ஆட்சியில் இல்லாத நிலை போன்றவை களே காரணம். இதையும் தாண்டி காங் கிரஸுக்கு வெற்றி கிடைக்கும் என்பதுதான் எங்களின் வலிமை. அதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

வாக்காளர்களை பர்ச்சேஸ் செய்துள்ள ஆளும் கட்சியின் பண விளையாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தேர்தல் களம் அனைத்து கட்சிக்கும் சம அளவில் இருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்தது. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அது இல்லாமல் போனது கவலை அளிக்கிறது. திராவிட கட்சிகளால்தான் இத்தகைய கலாச்சாரம் தமிழகத்தில் வேரூன்றிவிட்டது. இது, தொடரும் பட்சத்தில் தேர்தல் ஜனநாய கத்துக்கு ஆபத்து. இத்தகைய ஆபத்தினை தடுக்கவேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே நடந்துகொண்டிருப்பதும் கவலை தரும் விசயம்.  

காங்கிரஸை மக்கள் தூக்கி எறிய வேண்டும், டெபாஸிட் இழக்க வைக்க வேண்டுமென் றெல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாகப் பேசியதற்கு இணையாக காங்கிரஸில் ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லையே?


அப்படி யெல்லாம் இல்லை. இதற்கு அந்தந்த நேரத்தில் நான் பதிலடி தந்திருக் கிறேன். காங் கிரஸ் ஒரு பொருள் அல்ல; தூக்கி எறிவதற்கு. கிள்ளுக் கீரையும் அல்ல, அதைக் கிள்ளி எறிவதற்கு. கோரைப் பாயும் அல்ல; சுருட்டி வீசுவதற்கு. அது ஒரு பேரியக்கம். பெரிய மக்கள் சக்தி. 

மூன்றாவது அணியை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்களே தெரிவிப்பதால் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையாது என காங்கிரஸே நம்புகிறது தானே?


காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சொல்லியிருப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும். கட்சியின் கருத்தல்ல. அதனால்தான், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், "மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மூன்றாவது அணிக்கு ஆதரவு என்கிற எண்ணமெல்லாம் காங்கிர ஸிடம் இல்லை' என தெளிவுபடுத்தியிருக் கிறார். ஆனால், ஒரு விசயம், மதசார்புள்ள பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்படி ஒரு ஆட்சி அமையாமல் தடுக்க எல்லாவிதமான வாய்ப்புகளையும் காங்கிரஸ் பரிசீலிக்கும். அதற்கான முயற்சிகளை வலிமையாகவும் எடுப்பார் சோனியா காந்தி.

ad

ad