புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு 
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம் அதிகாரிகள் நேற்று மாலை கண்டுபிடித்ததாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதில் 98*19 அளவுடைய ரவைகள் - 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் - 2750 மற்றும் 357 ரக ரவைகள் - 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே தோட்டாக்கள் மீட்கப்பட்ட போதும்  இராணுவத்தினரும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிப்பிட்டுள்ளார்.

ad

ad