புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


விளையாடும்போது ரசிகர்கள் பாராட்டாமல், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று டேனி ஆல்வஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரேசில் தேசிய அணியைச் சேர்ந்த ஆல்வஸ், பார்சிலோனா கிளப் அணிக்காவும் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின்போது ரசிகர் ஒருவர் அவர் மீது வாழைப்பழம் ஒன்றை வீசினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விளையாட்டின்போது தனது செயல்பாட்டை ரசிகர்கள் பாராட்டத் தவறினால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று ஆல்வெஸ் எச்சரித்துள்ளார்.
"கால்பந்து விளையாட்டுக்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றி வரும் வீரர்களை எப்படி ரசிகர்கள் மறக்கின்றனர்? அது சரியானது அல்ல. அதனால், பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாடுவேன் என்று நான் எண்ணவில்லை. என்னை ரசிகர்கள் ஆதரித்தால் தொடர்ந்து இங்கேயே விளையாடுவேன். அவ்வாறு இல்லையெனில், வேறு அணிக்குச் சென்று விடுவேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆல்வெஸ் மீது வாழைப்பழம் எறிந்த ரசிகர் தனது வேலையை இழந்தார். இதை அறிந்த ஆல்வெஸ், அவருக்கு மீண்டும் வேலையை அந்த நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
"ரசிகர் என் மீது பழம் எறிந்தது ஒரு நகைச்சுவைக்காக. அதனால், அவர் வேலையை இழந்தார் என்பது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. அதனால், மீண்டும் அந்த வேலையை அவருக்கு அளிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad