புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


’வாக்களிக்கமட்டோம்’- வேட்பாளர்களால் கடுப்பான வாக்காளர்கள்!
மறுவாக்குபதிவில் பரபரப்பு!
சேலம் தொகுதியில் 213 -வது பூத்துக்கு  மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம் ‘கட்சி துண்டாடும்,கரை வேட்டியுடனும்
வர இதை தி.மு.க வேட்பாளர் உமாராணி எதிர்க்க என அந்த இடமே அடிக்கடி பரபரப்பாகி டென்சன் கூட்டி வந்தது.

முன்னதாக காலையிலேயே  7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவிருந்த நிலையில் முன்னதாக அதிகாரி கள் பூத் ஏஜெண்ட்டுகள் பட்டியலை எடுத்துவருவதற்கு பதிலாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் ஏஜெண்ட்டுகளின் பட்டிலை மாற்றி எடுத்து வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு பூத் ஏஜெண்ட்டுகள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு சுமார் 7 மணியளவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதன் காரணமாக வாக்குப்பதிவு காலதாமதமாக காலை 7.50 மணிக்கு தொடங்கப்பட்டது. ஆனால் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படுவதால் ஏராளமான வாக்காளர்கள் 6.30 மணியிலிருந்தே காத்திருந்தனர். இதனால் அவர்கள் சிரமத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாக்குப்பதிவை திமுக வேட்பாளர் உமாராணி நேரில் பார்வையிட்டார். அப்போது அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வமும் வாக்குசாவடிக்கு வந்து பார்வையிட்டார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டு பரஸ்பர வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். ஆனால், பின்னர் இந்த பரஸ்பரம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.
இருதரப்பும் அடிக்கடி வாக்குவாதம் செய்ததால் வாக்காளர்கள் வரிசை மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால் காலையில் இருந்தே கால்கடுக்க நின்றுகொண்டு இருந்த வாக்காளர்கள் ,’நாங்க கை குழந்தை களோடு வந்து வாக்களிகிறோம். ரொம்ப நேரம் குழந்தையை வெளிய வச்சுருக்க முடியாது. அதேபோல வோட்டு போட்டுட்டு தான் கூலி வேலைக்கு போகணும்.  இப்படி லேட் பண்ணா எப்படி வேலைக்கு போக முடியும்?நீங்களா கூலி தரீங்க?’ என ஆவேசமடைந்தனர்.
அதேசமயம் திடீரென காவல்துறையினர் ,’நூறு மீட்டர் தள்ளி தான் பத்திரிகையாளர்கள் செய்தி திரட்ட வேண்டும்.  இது மாவட்ட ஆட்சியர் உத்தரவு ’ என கூறி பத்திரிகையாளர்களை பள்ளியை விட்டு வெளியேற் றினர்.  
காலை சாப்பிட போய்விட்டு திரும்பிய பத்திரிகையாளர்களும் பள்ளியினுள் உள்ளே விடவில்லை. ‘உள்ளே பேட்டி எடுக்க கூடாது என்று தான் தேர்தல் விதி உள்ளது. மேலும் நாங்கள் பூத்துக்கு சென்று செய்தி சேகரிக்க தான் தேர்தல் ஆணையமே அடையாள அட்டை கொடுத்துள்ளது’ என தங்கள் தரப்பு நியாயத்தை வைத்தனர்.
சிலமணி நேர போராட்டத்திற்கு பிறகு உள்ளே செய்தி திரட்ட அனுமதித்தனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் ஹனீஸ் சாப்ரா பூத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுபோன்ற காலதாமதத்தாலும்,இந்த சில பிரச்சினை களாலும் 8 மணியளவில் வாக்குப்பதிவு 14 சதவீதத்தை எட்டியது. 10 மணியளவில் வாக்குப்பதிவு 31.5 சதவீதமும், அதை தொடர்ந்து 11 மணியளவில் வாக்குப்பதிவு 47.58 சதவீதமும், 12 மணிக்கு 58 சதவீத மும், 1 மணியளவில் 64.7 சதவீதமும் பதிவானது.

ad

ad