புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014



''ஒரு பக்கம் 'லிங்கா’ சந்தோஷத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் 'கோச்சடையான்’ வருத்தத்தில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். ரஜினி ரணத்தில் இருப்பதாக வரும் தகவல்கள் ரசிகர்களை கொந்தளிக்கவும் வைத்துள்ளது'' - என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.


''ரஜினியின் திரையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்ட முதல் படம் 'கோச்சடையான்’.  ரஜினியின் சமீபத்திய  திரைப்படங்களில் தோல்விப் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண முடியும். அந்தளவுக்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர் என எல்லோருக்கும் ரஜினி படங்கள் லாபத்தை கொட்டிக் கொடுத்தது. 'பாபா’, 'குசேலன்’ தோல்வியின்போதுகூட பாதிக்கப்பட்ட நபர்களைக் கூப்பிட்டு நஷ்டஈடு தொகையை கொடுத்து தன் பெயரைக் காப்பாற்றித் திரையுலகத்தினரைப் பிரமிக்கவைத்தார் ரஜினி. வழக்கமாக தனது படங்களை மூன்று மாதங்களுக்குள் முடித்து கொடுத்துவிடுவது ரஜினியின் வழக்கம். 'குரு சிஷ்யன்’ படத்தை ஒரே மாதத்தில் நடித்து கொடுத்தார் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது 'கோச்சடையான்’ படத்துக்காக இரண்டரை வருஷம் காத்திருந்தார்!''-யூனியர் விகடன் 
''ஆமாம்!''
''எப்போது 'ராணா’ படத்துக்கு பூஜை போட்டாரோ... அப்போது இருந்தே அவருக்குப் பிரச்னைகள் ஆரம்பம் ஆனது. உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று ஆரோக்கியத்துடன் திரும்பினார். பாவம்! உடல்நிலை தேறியவரை ஓய்வு எடுக்கக்கூட விடவில்லை மகள்.  'ச்சும்மா அனிமேஷன் படம்தான்பா... ரொம்ப ஸ்ட்ரெயின் எடுக்க வேணாம். ப்ளீஸ்ப்பா?’ என்று செல்ல மகள் சௌந்தர்யா அன்புடன் கெஞ்ச... பாசத்தில் படத்தில் நடிக்க தலையசைத்தார் ரஜினி. 'கோச்சடையான்’ ஆரம்பமானது இப்படித்தான். உலகம் முழுக்க திரைப்படங்களை தயாரித்து வரும் ஈராஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். அனிமேஷன் டெக்னாலஜி அறியாத ரஜினி முதலில் தர்ம சங்கடத்தில் நெளிந்தார். 'எனக்கு மோஷன் கேப்சர் அனிமேஷன் பத்தி எதுவுமே தெரியாது. முரளி மனோகரும், ரவிக்குமாரும்தான் என்கிட்ட இதுபற்றிச் சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நான் நடிக்கறதுக்கே ஒப்புக்கிட்டேன்’ என்று மனம்திறந்து வாக்குமூலம் கொடுத்தார் ரஜினி. படத்தில் சரத்குமார், நாசர், ஆதி, தீபிகா படுகோன் என்ற நட்சத்திரப் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்கள்.''
''இதில் சிக்கல் எங்கு ஆரம்பம் ஆனது?''
''தயாரிப்பாளர் முரளி மனோகர் ஏற்கெனவே 'மாற்றான்’ படத்தை விநியோகித்ததின் மூலம் 12 கோடி அதன் தயாரிப்பாளருக்குத் தரவேண்டி இருந்தது. 'கோச்சடையான்’ படத்துக்காக முன்கூட்டியே 26 கோடி ரூபாயை விநியோகதர்களிடம் வாங்கி இருந்ததாகவும் சொல்கிறார்கள். மொத்தம் 38 கோடியை செட்டில் செய்தால்தான் 'கோச்சடையான்’ படத்தை வெளியிட விடுவோம் என்று இரண்டு தரப்பும் முதலில் முட்டுக்கட்டை போட்டது. இந்தத் தகவலை முன்கூட்டியே உமக்குச் சொல்லியிருந்தேன். 'சிக்கலில் கோச்சடையான்’ என்ற பெட்டிச் செய்தியாகவும் வெளியிட்டு இருந்தீர். விரைவில் செட்டில் செய்வதாக சொல்லிக்கொண்டே இருந்த முரளி மனோகர், எப்படியோ 20 கோடி புரட்டி செட்டில் செய்தார். மீதமுள்ள 18 கோடியை படத்தின் ரிலீஸின்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல... ஒருவழியாக விநியோகஸ்தர்கள் படத்தின் ரிலீஸுக்கு ஒப்புக்கொண்டனர். பரபரவென பட வெளியீட்டுக்கான பணியில் இறங்கினர். தமிழகத்தில் 3டி வசதி கொண்ட தியேட்டர்கள் குறைவு. குறைந்த பட்சம் 100 தியேட்டருக்கு மட்டுமே 3டி கண்ணாடி அணிந்து 'கோச்சடையான்’ படம் பார்க்கும் திரைப்படப் பிரதிகள் தயார் செய்யப்பட்டன. 500 தியேட்டர்களுக்கு 'கோச்சடையான்’ 2டி படத்துக்கான பிரதிகளை மும்பையில் ரிலையன்ஸுக்கு சொந்தமான லேபில் தயார் செய்தனர். தமிழ்நாட்டின் எல்லா தியேட்டர்களிலும் முன்பதிவு பரபரப்பாகத் துவங்கியது. ரஜினி ரசிகர்கள் கட்-அவுட் பாலாபிஷேகம் என்று ஜெகஜ்ஜோதியாகக் கிளம்பினர்.''
''ம்!''
''கடந்த 6-ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை அழைத்து லதா ரஜினியும், சௌந்தர்யாவும் 'கோச்சடையான்’ ரிலீஸ் புரமோஷன் குறித்து கலந்துரையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி னர். எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென புது இடி 'கோச்சடையான்’ படத்தைத் தாக்கியது. இந்தப் படத்துக்காக முரளி மனோகர், ஒரு வங்கியில் 21 கோடி ரூபாய் பணத்தை கடனாக வாங்கியது தெரியவந்தது. 'எங்களிடம் வாங்கிய 21 கோடி ப்ளஸ் வட்டியை செலுத்திவிட்டுப் படத்தை வெளியிடவும்’ என்று மும்பையில் உள்ள லேப் நிறுவனத்துக்கு கடிதம் கொடுத்தது அந்த வங்கி. இதனால் ஆடிப்போனது 'கோச்சடையான்’ டீம்.  அதுவும் மகளின் பாசத்துக்காக 'கோச்சடையான்’ படத்துக்கு சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினி அதிர்ச்சியில் உறைந்துபோனார். நிம்மதி இல்லாமல் ரஜினி பெங்களூருக்குப் பறந்தார். எப்போதுமே தனது ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு சில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, அதன் பிறகே அடுத்தப்பட அறிவிப்பை வெளியிடுவார் ரஜினி. ஆனால் 'கோச்சடையான்’ குடைச்சலில் இருந்து தப்பிக்கவே 'லிங்கா’ பட அறிவிப்பை வெளியிட்டு படபூஜைபையும் படப்பிடிப்பையும் பெங்களூரில் நடத்திக்கொண்டு இருக்கிறார் ரஜினி என்கிறார்கள்!''
''அடுத்து..?''
''கடந்த 7-ம் தேதிவரை 'கோச்சடையான்’ ரிலீஸ் விவகாரத்தில் ரஜினி நுழைவார் என்று முரளி மனோகர் எதிர்பார்த்தாராம். அதுமட்டும் இல்லாமல், 'படத்துக்கு நான் பொறுப்பு. பணப் பிரச்னை எது இருந்தாலும் அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ரஜினி உறுதி கொடுப்பார் என்று தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்தது. அதற்காக ரஜினியிடம் முயற்சியும் செய்தனர். 'நோ... நோ... 'கோச்சடையான்’ வேற.. 'லிங்கா’ படம் வேற. ரெண்டையும் லிங்க் பண்ணி கன்ஃப்யூஸ் பண்ணாதீங்க!’ என்று கறாராக மறுத்துவிட்டார் ரஜினி. தன்னுடைய மகளுக்காக நடித்துக்கொடுத்த படம் இவ்வளவு சிக்கலை ஏற்படுத்தும் என்று ரஜினி எதிர்பார்க்கவில்லை’ என்றும் சொல்கிறார்கள். மே 23-ம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும் அதற்குள் இந்தப் பிரச்னை தீருமா எனத் தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். உலகமே எதிர்பார்த்த பெரும் செலவில் உருவாக்கப்பட்ட 'ஸ்பைடர் மேன்’ 3டி திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலை வாரியிறைக்கும் என்ற கனவோடு மே 1-ம் தேதி வெளிவந்தது. எதிர்பார்த்துபோல படம் பெரிதாகப் பேசப்படவில்லை. அடுத்து மே 16-ல் 'காட்ஸில்லா’ 3டி படம் திரைக்கு வரப்போகிறது. அதன்பின் 'கோச்சடையான்’ படம் எப்படி எப்போது ரிலீஸாகப்போகிறதோ? பார்ப்போம்!'' என்றபடி அடுத்த மேட்டருக்குத் தாவினார்.
''ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பரபரப்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. புதுப் புது மனுக்களை ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துவருகிறது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? இந்த மனுக்கள் மீது கடந்த 5-ம் தேதி விசாரணை நடந்தது. 'சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கம்பெனிகளை விடுவிக்கக்கோரி நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களை முதலில் விசாரிக்க வேண்டும். அதுவரை மூல வழக்கு விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் வாதிட்டார். ஆனால், அதனை அரசு வழக்கறிஞர் மறுத்தார்.
இரண்டு தரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்கா, 'இந்த சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கை தினமும் நடத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணையைத் தொடர்ந்து வருகிறோம். தங்களை விடுவிக்க வேண்டும் என்று நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டோம். ஆனால், மூல வழக்கை நிறுத்திவிட்டு இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று தடைபோட முடியாது. மூல வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு முன் இந்த கம்பெனிகள் சம்பந்தமான மனு மீது தீர்ப்பு வழங்கப்படும்’ என்று தீர்ப்பளித்து உள்ளார். இது ஜெயலலிதா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!''
''ஓஹோ!''
''இதேபோல் வேறு கோரிக்கைகளை வைத்து அந்த கம்பெனிகள் வேறு சில மனுக்களையும் தாக்கல் செய்திருந்தது. அதனையும் நீதிபதி குன்கா தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் தனது இறுதிக்கட்ட வாதத்தை தொடர்ந்து வருகிறார். இதுவரை சாட்சியம் அளித்தவர்கள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை தொகுத்துக் கூறினார் பவானி சிங். சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் நல்லம நாயுடு. அவர் அளித்த சாட்சியத்தின் சாராம்சத்தை பவானி சிங் தொகுத்துக் கூறினார். பிறகு பவானி சிங்கை பார்த்துப் நீதிபதி குன்கா, 'நீங்கள்  இந்த வழக்கின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் மே 9 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொகுத்துக் கூற வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அது முடிந்ததும், மே 19-ம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களது தரப்பு சாட்சியங்களின் வாதங்களைத் தொகுத்துச் சொல்வார்கள். சுமார் ஒரு மாதங்கள் இதற்கு ஆகலாம். மே 15-ம் தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வாதங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ஜூன் இறுதிக்குள் அனைத்தும் முடிந்து ஜூலை முதல் வாரம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என்பதே இன்றைய நிலைமை என்கிறார்கள்!''
''திடீர் பிரளயமாக இருக்கிறதே?''
''14 ஆண்டுகளாக நடந்துவரும் விவகாரத்தில் இதனை திடீர் பிரளயம் என்று சொல்ல முடியுமா என்ன? இதனை ஜெயலலிதா தரப்பும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.''
''சொல்லும்!''
''போஸ்டர், கட்-அவுட் வைத்து மதுரையில்தான் மல்லுக்கட்டுவார்கள் என்றால் திருச்சி தி.மு.க- விலும் இது தொடங்கிவிட்டது. முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவுக்கும் முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜுக்குமான மோதல் பிரசித்தி பெற்றது. அமைதி யுத்தம் நடத்துவதில் இருவரும் கில்லாடிகள். கடந்த 5-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய செல்வராஜை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர், செல்வராஜைப் பாராட்டுவதாக மட்டும் இல்லாமல் நேருவை மறைமுகமாகத் திட்டுவதாகவும் அமைந்துவிட்டது. இது தலைமை வரை கொந்தளிக்க வைத்துள்ளது. 'பொதுவாழ்வில் குற்றமே இல்லாத கோமேதகமே, பிறரைக் கெடுக்காத பெருமதியாளனே, பதவிகள் மூலம் தன்னை வளப்படுத்திக் கொள்ளாதவனே, புறஞ்சொல்லாத புறநானூற்று வீரம், ஊர்ப் பணத்தில் உல்லாசம் புரியாதவன், உன்னால் முகவரி பெற்றவனும் துரோகம் இழைத்தாலும் துச்சமெனக் கருதுபவனே.....’ என்று போகிறதாம் அந்த கட்-அவுட். 'அடுத்தவரைத் திட்டித்தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டுமா?’ என்றும் 'தலைவருக்கும் தளபதிக்கும் துரோகம் செய்துவிட்டு வைகோவுடன் போய் துரோகம் செய்த செல்வராஜ் எல்லாம் துரோகத்தைப் பற்றி பேசலாமா?’ என்றும் நேரு ஆட்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளார்கள். மதுரை, தஞ்சையைப்போல வெளிப்படையான மோதல் திருச்சியிலும் நடக்கும் என்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ''திருச்சி அ.தி.மு.க-வில் தேர்தல் செலவுகளை ஒழுங்காகப் பார்க்காமல் சுருட்டிக் கொண்டவர்களுக்கு சூடுவைக்கும் படலத்தை முதல்வர் தொடங்கியிருக்கிறாராம்.

ad

ad