புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

ஜெ., வழக்கில் ஆஜராக அரசு வக்கீல் மரடி மறுப்பு



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, அரசு உதவி வழக்கறிஞர் மரடி மறுத்துவிட்டார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் போது, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கும், உதவி வழக்கறிஞராக முருகேஷ் மரடியும் ஆஜராகியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், சம்பளம் குறைவாக இருப்பதால், தன்னால் வாதிட முடியாது என, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறி, ராஜினாமா செய்ததாகவும், அதையடுத்து, அவரை சமாதானம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த ராஜினாமாவை பவானி சிங் மறுத்து, விசாரணையின் போது தொடர்ந்து ஆஜராகி வந்தார். இந்நிலையில், அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி, ஜெ., சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, பவானி சிங்கிடம், நேற்று முன்தினம் நேரடியாகக் கூறியுள்ளார். இதனால், நேற்றைய விசாரணையின்போது, மரடி ஆஜராகவில்லை. 

இது குறித்து பவானி சிங்கிடம் கேட்ட போது, "வழக்கு விசாரணைக்கு, நான் இனி வர மாட்டேன் என்று கூறிவிட்டு, மரடி சென்று விட்டார். நான், என்ன செய்ய முடியும்? வேறு யாரையாவது நியமனம் செய்வர்,” என்றார்.

 'பவானி சிங்கிற்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது; எனக்கு இன்னும் அதிகரிக்கவில்லை. எனவே, சம்பளத்தை அதிகரிக்குமாறு, 'ஆர்டர்' வாங்கிக் கொடுக்க வேண்டும்' என்று மரடி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ad

ad