புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போதுவிபத்தில் உயிருடன் தப்பிய விமானியை கொன்றால் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்: ஜோர்டான் அரசு



விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம் என்று ஜோர்டான் அரசு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
ஜோர்டான் விமானி முயாத் அல்–கசீஸ்பே என்பவர் கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்துள்ளது.
அதிலிருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக வைத்துள்ளனர்.
இதையடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டுமெனில், ஜோர்டான் சிறையில் இருக்கும் ஐ.எஸ்.பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.
ஆனால், விமானி அல்–கசீஸ்பே உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை ஐஸ் தீவிரவாதிகள் தரவேண்டுமென்று தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டதற்கு தீவிரவாதிகள் இதுவரை பதில் எதுவும் தரவில்லை.
இந்நிலையில் ஜப்பான் பிணைக் கைதியான கென்ஜி கோடோ படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த ஜோர்டான் அரசு, இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தகவலை ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் அனுப்பியுள்ளனர்.
அந்த அறிக்கையில், விமானி அல்–கசீஸ்பேவை விடுதலை செய்ய வேண்டும். அவரை கொலை செய்தால் ஜோர்டான் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா உள்ளிட்ட அனைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகளையும் நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை விதித்து அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், விமானி உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான ஆதாரத்திகாக இன்னும் காத்திருப்பதாகவும் ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது.

ad

ad