புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

யாழ்ப்பாணத்திற்கு வருவார் மோடி


இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கை வருகிறார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். 
 
இதன் பின்னர் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமாக வருபவர் இந்தியப் பிரதமர் மோடியாகவே காணப்படுகிறார்.
 
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் இந்திய அரசாங்கத்தின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம், பொருளாதார ஒப்பந்மான 'சீபா', சம்பூர் அனல் மின் திட்டம், என்பவை தொடர்பில் ஆராய்வார். அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கியமாக ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
அத்துடன் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மாகாணமான வடக்குக்கும் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கும் வருகை தருவார் என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad