புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

பவானிசிங்கை மாற்றக்கோரிய மனு: நாளை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகிவரும் பவானிசிங்கை நீக்கக்கோரிய மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்ததீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்பு நடந்துவருகிறது. 

இந்தவழக்கு விசாரணையில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக ஆஜராகி வரும் பவானிசிங்கை நீக்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்திருந்த ரிட்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலா, அசோக் பி.ஹின்சனகி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.வி.நாகேஷ்,ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவிசாரணையில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக ஆஜராக கர்நாடக அரசு சார்பில் பவானிசிங் நியமிக்கப்படவில்லை. மாறாக, தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் அரசுத்தரப்பு வழக்குரைஞராக நியமித்துள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே, அவரை அந்த பதவியில் இருந்துநீக்க வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.எல்.என்.ராவ்,குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 24(1)-இன்கீழ் அரசுத்தரப்பு வழக்குரைஞரை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமையுள்ளது என்று வாதிட்டார்.

 இந்த மனு தொடர்பாக எழுத்துப்பூர்வமான கருத்துகளை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசு, தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம், வழக்குரைஞர் பவானிசிங் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்தமனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு(பிப்.3) ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத்தரப்பில் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார், பவானிசிங் தரப்பில் வழக்குரைஞர் செபாஸ்டின் ஆஜராகியிருந்தனர்.

ad

ad