புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

கூட்டமைப்பிற்கு சவாலாக புதிய அரசியல் கட்சி ; விவாதிக்க அனந்தி இந்தியாவிற்குப் பயணம்!


வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான திருமதி. அனந்தி சசிதரன் இன்று தனிப்பட்ட விஜயமாக இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.



இவர் இந்தியாவில்  புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தாயகத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை அமைப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பார் என விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


இவ்விடயம் தெபடர்பாக மேலும் தெரியவருவதாவது,


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக செயற்பட்ட எழிலனின் மனைவியாகிய அனந்தி சசிதரன் தற்பொழுது வடக்கு மாகாண சபையில் மக்களால் தெரவுசெய்யப்பட்ட உறுப்பினராக செயற்பட்டுவருகின்றார்.



இவருடைய நடவடிக்கைகயில் அதிருப்தி அடைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமைகள் இவருக்கு தற்காலிகமாக் கட்சிச் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு தடைவிதித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் அனந்திக்குத் தடை விதித்துள்ளதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.


இதேவேளை அனந்தியின் நன்மதிப்பிற்குக் கேடு எற்படும் வகையில், எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் கட்டாய ஆட்பிடிப்பில் ஈடுபட்டவர் எனவும் நேர்மையில்லாத போராளி எனவும் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் பொதுமக்கள் மத்தியில் விமர்சித்து தனது வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சித்துள்ளார்.



அதேபோல் இதுவரை காலமும் அனந்தியின் வழிகாட்டலில் செயற்பட்டுவந்த காணமல் போனவர்களின் சங்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கையகப்படுத்தியுள்ளதுடன், அனந்தியையும் அனந்தி சார்பானவர்களையும் ஓரங்கட்டி தனது தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளுக்காக காணமல் போனவர்களின் உறவுகளைப் பயன்படுத்தி அர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றார்.


இந்நிலையில் அனந்தி இரகசியமாக இன்று அவசரஅவசரமாக இந்தியாவிற்கு பயணமாகியுள்ளார். எதிர்வரும் 08 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருக்கவுள்ள அனந்தி, அங்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடன் கலந்துரையாடவுள்ளார். மேலும் அனந்தியை சந்திப்பதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சிலர் இந்தியாவிற்கு விரைந்துள்ளதாகவும் விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அனந்தி போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சி தடைவிதிக்குமாயின் அனந்தி தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை தாயகத்தில் அமைப்பது தொடர்பிலும் அனந்தியின் இந்திய விஜத்தின் பொழுது விரிவாக ஆராயப்பவுள்ளதாகவும் தகவல்; வெளியாகியுள்ளது.


இதனால் அனந்தியின் இந்தியப் பயணம் முக்கிய நிகழ்வாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad