புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

மஹிந்தவின் சர்வதேச நிதிக்கொடுக்கல்களை கண்டுபிடிக்க இந்தியா இலங்கைக்கு உதவவுள்ளது

நிதிப்புலனாய்வு பிரிவு ஒன்றை அமைப்பதற்கு இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளது.

இந்த பிரிவின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது ஏனைய நாடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 பில்லியன் டொலர்களை தேடுவதற்காகவே இந்த உதவி கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தேர்தல் காலத்தின்போது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே மைத்திரிபாலவின் அரசாங்கத்துக்கு இந்திய மோடியின் அரசாங்கம் உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ யோசனையை விரைவில் முன்வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 2004ஆம் ஆண்டு நிதிப்புலனாய்வு பிரிவு(எப்ஐயூ) ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த நவம்பரில் எப்ஐயூவும் அவுஸ்திரேலிய நிதிப்புலனாய்வுப்பிரிவும் இணைந்து சர்வதேச ரீதியில் சட்டவிரோத பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தன.
ஏற்கனவே கடந்த அரசாங்கத்தின் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களை கண்டுபிடிக்க உலக வங்கியிடமும், சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கை கோரிக்கையை விடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ad

ad