புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

சென்னையில் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு



தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுபோல், போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகியவை முடங்கியுள்ளது.

விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால் விமானங்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதோடு, விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. சென்னையை இணைக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் தண்ணீர் புகுந்திருப்பதால் வாகன போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியூரில் இருந்து வரக்கூடியவர்களும், சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு செல்லக் கூடியவர்களும், உரிய நேரத்தில் போய் சேர முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். 

வெளியூரில் இருந்து எழும்பூருக்கு வந்து சேர வேண்டிய 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய ரயில்களும் உரிய நேரத்தில் வரவில்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து தண்டவாளத்தில் நிற்பதால் ரயில் நிலையத்திற்குள் எந்த ரயிலையும் அனுமதிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நள்ளிரவு வர வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. காலை 4 மணிக்கு வரவேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.30 மணி வரை வரவில்லை. இதேபோன்று நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 10 ரயில்கள் சென்ட்ரலுக்குள் வரமுடியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று பேருந்துகளை பிடித்து சென்னையில் உரிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்று கருதினால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயிலைவிட்டு இறங்க பயணிகள் அச்சமடைந்து நின்றனர். ரயில் எப்போது சென்ட்ரலை சென்றடையும் என்று  காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது, ரயில் நிலையத்திற்குள் நிற்கும் தண்ணீரை முற்றிலும் அகற்றினால்தான் ரயில்களை அனுமதிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

ad

ad