புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

கனமழை எதிரொலி: சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து

சென்னையில் தொடரும் கனமழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கனமழையின் காரணமாக விமானநிலையத்திலிருந்து பயணிகள் வெளியில் வரவும், உள்ளே செல்லும் முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. சென்னைக்கு வந்து சேரும் 20-க்கும் மேற்ப்பட்ட விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. இதனால் சென்னை விமானநிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னை-கோவை, கோவை-சென்னை இடையேயான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன மழையால் பகல் 12 மணி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad