புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

வாசுதேவவின் தகாத வார்த்தையால் பாராளுமன்றில் பெரும் சர்ச்சை


பாராளுமன்ற உறுப்பினரான தனக்கு கொழும்பில் வீடு ஒன்று இல்லையென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது ஆளும் கட்சியினர் “ஊ” சத்தம் இட்டனர்.
இதனால் வழமை போன்று வாசுதேவ நாணயக்கார சபைக்குள் தகாத வார்த்தை ஒன்றைக் கூறவே சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வாசுதேவ நாணக்கார எம்.பி. தனியாக நின்று கூச்சலிட மறுபுறத்தி ஆளும் கட்சியினர் அதிகமாக சத்தமிட்டனர். இதனால் சபை சிறிது நேரம் சர்ச்சைக்குள்ளாகியிருந்ததைக் காணமுடிந்தது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த வாசுதேவ நாணயக்கார எம்.பி. முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை இதுவரையில் ஒப்படைக்கவில்லையென சிங்களப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அப்பத்திரிகை வெளியிட்ட செய்தியில் எனது பெயரும் உள்வாங்கப்பட்டிருந்தது.
நான் இப்பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற உறுப்பினராக இருக்கிறேன். எனினும் எனக்கு உரித்துள்ள வீடு ஒன்றை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே பாராளுமன்ற உறுப்பினருக்குரிய உரிமை என்ற வகையில் எனக்கு வீடு ஒன்றை பெற்றுத்தருமாறு கோருகிறேன் என்றார்.
உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு கோரிக்கை விடுத்த மறுகணத்தில் ஆளும் தரப்பு பக்கமாக இருந்து “ஊ” சத்தம் எழுந்தது.
இதனையடுத்து ஆளும் கட்சி எம்.பி.க்களைப் பார்த்த வாசுதேவ நாணயக்கார “சும்மா இரு ஓய்” என்று கூறினார். அத்துடன் நான் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றையே முன்வைப்பதாகவும் கூறினார். எனினும் ஆளும் கட்சியின் பக்கமாகவிருந்து பெரும் கூச்சல்கள் எழுப்பப்பட்டவாறு இருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவ எம்.பி. ஆளும் கட்சியினரைப் பார்த்து மேலும் பல தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தார்.
இதனையடுத்து ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகையில், உறுப்பினர் வாசுதேவவினால் முன்வைக்கப்படும் பிரச்சினையானது சிறப்புரிமைப் பிரச்சினையாக ஏற்றுக் கொள்ள முடியாது. என்றார்.
இதுகுறித்து ஆளும் கட்சியின் நளின் பண்டார எம்.பி. கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடுகள் அமைச்சராக இருந்தவர். எனினும் அவர் இப்பாராளுமன்றத்துக்கே பொருத்தமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றார் எனவே அவற்றை அவர் வாபஸ் பெறவேண்டும் என்றார்.

ad

ad