புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3-ம் தேதி) காலை தமிழக முதலமைச்சர் பார்வையிடுகிறார்
என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னையில் சாலை, ரயில், விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நாளை (3-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (4-ம் தேதி) பொதுவிடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து தமிழக அரசு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், நாளை காலை தமிழக முதலமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ''பெருமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை இன்று (2.12.2015) பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்திய வான்படைக்கு சொந்தமான விமானத்தின் விமானிகள், தற்போது மீண்டும் மழை பொழிவதால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஹெலிகாப்டர் பறக்க இயலாது என்று தெரிவித்தனர்.

எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3.12.2015) காலையில் பார்வையிடுவார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

ad

ad