புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்


அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலை போகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன.
இன்று கூட இப்பேர்ப்பட்ட மக்கள் உதவி கோரி என்னிடம் வந்தார்கள். இன்று மக்கள் சந்திப்பு நாள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எம் மக்களை வலுவூட்டுவதற்குப் பாடுபட வேண்டிய தருணம் இது.
இதைவிடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். நான் இது பற்றிக் கவனமாகவே இருக்கின்றேன்
அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலைபோகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்று விரும்புகின்றேன். இதுவே மக்களின் விருப்பமுமாகும்.
எனது சட்டக்கல்லூரி சமகால நண்பர் ஆனந்தசங்கரி அவர்கள் எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தி உள்ள கருத்துக்களுக்கும் அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதை மட்டுமே என்னால் தற்போது கூற முடியும்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

ad

ad