புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் துருக்கி உறவு! ரஷ்யா கடும் எச்சரிக்கை

ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து துருக்கி எண்ணெய் கொள்வனவு செய்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றிருந்த ரஷ்ய ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
 
ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்து வரும் துருக்கி, தங்களது எல்லைக்குள் எண்ணெய் கொண்டு வரப்படும் வழித்தடங்களைப் பாதுகாக்கவே ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
 
சிரியாவில் அதிபர் அல்-அஸாத்துக்கு ஆதரவாக ஐ.எஸ். பயங்கரவாத நிலைகள் மீதும், பிற கிளர்ச்சி அமைப்புகள் மீதும் ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.​
 
இந்த நிலையில், தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, ரஷ்யாவின் போர் விமானத்தை துருக்கி கடந்த மாதம் 24 ஆம் திகதி சுட்டு வீழ்த்தியது.
 
அந்த விமானத்திலிருந்து பாரசூட் மூலம் குதித்த விமானிகளில் ஒருவர் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ரஷ்யப் படையினரால் மீட்கப்பட்டார்.
 
அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர்களில் ஒன்று கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சேதமடைந்தது. அதிலிருந்த ரஷ்ய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
 
இதையடுத்து ரஷ்யா – துருக்கி இடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது. எனினும், இந்தச் சம்பவத்துக்காக போரைத் தொடங்க மாட்டோம் என இரு நாடுகளும் திட்டவட்டமாகத் தெரிவித்தன.
 
இருந்தாலும், போர் விமானம் வீழ்த்தப்பட்டதற்குப் பதிலாக, துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டா

ad

ad