புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைக்கும் பள்ளிவாசல்கள், தியேட்டர்கள்!

சென்னையில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
. சென்னை அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை நகரமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னை மாநரின் 80 லட்ச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அன்றாட  தேவைகளுக்கு அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை நகரில் வெள்ள நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏராளமான பேர்  தன்னார்வத் தொண்டர்களாக களமிறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். உணவு வேண்டுமா? எங்களை கூப்பிடவும்... படகு வேண்டுமா? எங்களை அழைக்கவும் என்று ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செல்போன் எண்களை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ,  சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் மக்கள் வந்து தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கும் மக்களுக்கு பள்ளி வாசல் நிர்வாகிகள் உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.  

சென்னையில் இயங்கி வரும் பிரபல சினிமா தியேட்டர்களும், மக்களை இரவில் தங்க அனுமதித்துள்ளன. ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள் தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓ.எம்.ஆர். சாலையில் தவிப்பவர்கள் ஏ.ஜி.எஸ். சினிமாவில் தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ad

ad