புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

பகிடிவதைகளுக்கெதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புக்குமான அமைப்பு

.
மனித வன்முறைகளின் மாபெரும் கூடமான யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் "ராகிங் " என்ற பெயரில் இடம்பெறும் நடைபெறும் அனைத்து வகையான கொடூரங்களுக்கும் எதிரான சகல வகை
ஆதரங்களுடன் கூடிய முழுமையான ஆவணத்தை தொகுக்கப் போகிறோம் .
ஏலவே பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன . அவற்றில் சில உங்களுக்கு , இந்த மாத இறுதிக்குள் பொலிஸ் , சட்ட ஆலோசகர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் பொது உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளோம் . அதன் பின்னர் , உடனடியாக பின்வரும் விதமான சேட்டைகளுக்கு சட்ட நடவடிக்கை மற்றும் குறித்த பாதிக்கப்பட்ட நபருக்கான பாதுகாப்பு தொடர்பான பொலிஸ் அறிக்கை போன்றன வெளியிடப்படும் .
சேட்டைகள் அல்லது ராகிங்
1 - ஆடை தொடர்பானது - இந்த வகையான ஆடைகளை தான் உடுத்த வேண்டும் , என்ற வழமை, தலை முடியை வாரும் விதம் , அலங்காரம் போன்றன .இது "தனிமனித சுதந்திரம் " என்ற அடிப்படையில் சட்டரீதியாக தண்டனைக்குரியது . அதுவும் ஒரு கும்பல் இன்னொரு தொகுதி மேல் செலுத்துவது அடக்குமுறை .
2 - பணம் பெறல் - வரவேற்பு விழா ,பிரியாவிடை , இடை இடையில் விசேட விழாக்களுக்கு என்று சொல்லி பணத்தினை "பிடுங்குதல் " . இங்கு பணம் செலுத்துவது ,செலுத்தாது ஒன்றுடன் உடன்படுவது உடன்படாதது தனி ஒருவரின் உரிமை . இதுவும் வன்முறை .
மேலும் இவ்வகையான விழாக்களில் லட்சக்கணக்கான ரூபாய் போதை வஸ்துக்களுக்கு பயன்படுகின்றது . "போதை பொருள் தடுப்பு பிரிவில் " உள்ள சிலருடன் இது பற்றி உரையாடினோம் . இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் .
3 - பெண்கள் மீதான பாலியல் சேட்டைகள்
*பாலியல் ரீதியான வார்தைகளை சொல்லி ஏசுதல்
* தொலைபேசி இலக்கங்களை மிரட்டி வாங்குதல் , பின் தொலைபேசியில் பேசச் சொல்லி கட்டாயப் படுத்தல் .
* மிரட்டும் தொனியில் சேட்டைகளை நடத்தி பெண்களை ஒடுக்குதல்
பொண்டிங் என்ற பெயரில் செய்யும் பண்டிகை எல்லை மீறி அனைவரையும் சேற்றுக் குளியலில் குளிக்க வைத்தல் ( தங்களது பிரிவின் மேல் )( இவை பரீட்சை நேரங்களில் , பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் , மேலும் விரிவுரை நேரங்களில் ). பல பெண்கள் இது தொடார்பில் கூறியிருக்கிறார்கள் .
4 - ஆண்கள் மீதான அடக்குமுறை
* பணம் பிடுங்குதல்
* அடித்தல் ,உதைத்தல் , பொது இடங்களில் அவமானப் படுத்துதல் .
(இவற்றுக்கு அளவே இல்லை , இவை ஒரு சிறைச்சாலையின் தண்டனைக் கூடத்தை ஒத்த வகையில் தான் இடம்பெறும் )
இவை மிக மோசமான கும்பல் வன்முறை . அடக்குமுறையாளர்கள் , வன்முறையாளர்கள் , கொடுங் கோலர்களின் ஆட்சிகளில் மக்களை இப்படித் தான் துன்புறுத்துவார்கள் . இவர்களும் அந்த வகை உளவியல் சிக்கல் உள்ளவர்களே .
"ராகிங் என்ற கலாசாரம் "
இஸ்லாத்தில் பிறமதங்களின் பண்டிகைகளுக்கு பணம் கொடுத்தல் "ஹராம் " ஆனால் இங்கே இவர்கள் குடிப்பதற்கு "பணம் கொடுப்பது " ஹராமில்லையா ? "
என்றொரு இஸ்லாமிய சகோதரி கேட்டார் .
' இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் ஆண்களுடன் பேசுவது சீனியர் இஸ்லாமியர்கள் தடை செய்துள்ளனர் .
" மஜிலிஸ் " என்ற கூட்டம் இஸ்லாமியர்களுக்கனது , இதில் கட்டாயப் படுத்தி அனைவரும் வரவேண்டும் என்று சொல்கிறார்கள் .
மத ரீதியான துன்புறுத்தல்கள் , ஓரங் கட்டல்கள் , பழிப்பு வசைகள் என்பன பலரின் வாயிலும் வரும் .
00
பின்னர் இது ஓர் கலாசாரம் இதை மீறக் கூடாது என்று ராகிங் ஐ . குறிப்பிடுகின்றனர் சீனியேர்ஸ் என்கின்ற வன்முறையாளர்கள் .

( இதில் குறிப்பிடப்படுவது ராகிங் செய்பவர்களையும் , அதற்கு துணை போவபர்களையும் பற்றி மட்டும் தான் (இதில் தங்களது சக நண்பர்களிடம் இதை தடுக்காமல் சும்மா இருக்கும் சீனியர் பெண்களும் உள்ளடக்கம் )
இதில் பெரும்பாலான வன்முறைகள் கலைப் பீடத்திலேயே நடக்கின்றன . இரண்டாமிடத்தில் முகாமைத்துவம் . மற்றவை பின்னர் .
இது ஒன்றும் தேவையான கலாசாரம் அல்ல . இதற்கு ஆதரவாக வைக்கும் வாதங்கள் எல்லாமே , பெரும்பாலும் ராகிங் செய்பவர்களின் வன்முறைகளை ஏற்றுக் கொள்பவர்களே ,அதையும் மீறிய மகத்தான நோக்கங்கள் அதற்கு இருப்பின் பதிவிடுங்கள் .
இவை சில உதாரணங்களே , சில விரிவுரையாளர்களும் பாலியல் சேட்டைகளில் ஈடுபட இவர்களே தூண்டுதல் . இது பெரும் உளவியல் நெருக்கடியை , மன முறிவை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் , இதை செய்பவர்களும் இதை ஒன்றும் அறியாதவர்கள் அல்ல . பாலியல் வறுமை , தனது எல்லைக்குள் உள்ளவனை அடிமையாக கருதும் மனோபாவம் முதலியன தான் இவற்றுக்கு காரணம்.
முழுமையான உரையாடல் பொதுவெளியில் விரைவில் ....
கிரிஷாந்

ad

ad