திருமணமாகி 15 நாளாகிய எனது மகனை 2006-09-10 திருநெல்வேலியில் உள்ள எனது வீட்டிற்கு அதிகாலை 1.30 ற்கு வந்த குழுவினரால்
கடத்தப் பட்டவரை 2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொள்ளுப்பிட்டியில் ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது உறவினர்கள் கன்டனர் என தந்தையார் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியம் அளித்த ச.ரஜீவனின் தந்தையார் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்இ
2006-09-10 அன்று இராமநாதன் வீதியில் உள்ள எனது வீட்டிற்கு அதிகாலையில் ஒரு கயஸ் 4 உந்துருளி என்பவற்றில் வருகைதந்த 15 வரையான ஆயுதம் தரித்தோர் எனது மகனைக் கடத்திச் சென்றனர். இவ்வாறு கடத்தியவர்களில் ஒருவரை நான் நன்கு அறிவேன். அவர் அந்தக் காலத்தில் திருநெல்வேலி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த சஞ்சை லியனகே ஆவார். இவரிடம் கிளியரன்ஸ் ஒப்பம் பெற நான் பல முறை சென்று வந்துள்ளமையினால் இனம்கண்டு கொண்டேன்.
இதன் பின்பு கடந்த 2013ல் கூட என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் என்னையும் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன் உப பரிசோதகர் பண்டாரா என்பவர் எனது மகன் கல்வி கற்ற இரு பாடசாலைகளிற்கும் சென்று சான்றிதழைப் பெற்றுள்ளனர்.
இதன் பிற்பாடு இறுதியாக 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எனது மகனை கொழும்பு இகொள்ளுப்பிட்டியில் ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது நெருங்கிய நண்பர் நேரில் கண்டுள்ளார். எனவே அவர் உயிருடன் உள்ளது தெரிகின்று இதனால் கடத்தப்பட்ட எனது மகனை இந்த ஆணைக்குழு உடன் மீட்டுத்தரவேண்டும் என்றார்.
.