ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்துள்ளது சென்னையின் எஃப்.சி. சென்னை அணியின் வெற்றிக்கு பின் உள்ள கெத்தான 7 விஷயங்கள் இதோ...
சி.எஸ்.கே ஸ்டைல் ஆட்டம்:
சூப்பர் கிங்ஸ் போலவே ஆரம்பத்தில் தோல்வியோடு ஆரம்பித்து புள்ளி பட்டியலில் 7வது இடம் வரை சறுக்கி இருந்த சென்னை அணி கடைசி நான்கு ஆட்டங்களில் 4-1, 4-0 , 3-0, 1-0 என வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக அரையிறுதியில் மூன்றாவது இடத்தை பிடித்தது. நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை அரையுறுதியின் முதல் ஆட்டத்தில் 3-0 என தோற்கடித்து ஐ.எஸ்.எல் தொடரின் கில்லி அணியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கோல்டன் பூட்:
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டும் மெண்டோசா விளையாடவில்லை. அடுத்து ஆடிய ஆட்டங்களில் எல்லாம் எதிரணியின் கவனம் முழுவதும் இவர் மீது தான். இவரை சமாளித்தால் வென்று விடலம் என்பதே பல அணிகளின் உத்தியாக இருந்தது. பந்தை லாவகமாக கடத்தி சென்று கோலாக்குவதில் தெறி வீரர் மெண்டோசா. 14 ஆட்டங்களில் 12 கோல்களுடன் கோல்டன் பூட் இவர் கையில் தான். யாருமே இவரது எண்ணிக்கைக்கு அருகில் இல்லாத நிலையில் இவருக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது கோல்டன் பூட். சென்ற வருடமும் எலானோ ப்ளூமர் மூலம் சென்னைக்கு தான் கோல்டன் பூட்.
கோல்டன் பால்:
எடெல் பீடே சென்னையின் கோல்கீப்பர் தான் இந்த தொடரின் சிறந்த கீப்பர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 100 நிமிடங்களுக்கு ஒரு முறைதான் இவரை தாண்டி பந்து செல்கிறதாம். அப்படியென்றால் 2 ஆட்டங்களுக்கு ஒரு கோல் தருகிறார் என்கிறது புள்ளிவிவரம். சென்னை அணியை போலவே ஆரம்பத்தில் சொதப்பி பின்னர் ஃபார்முக்கு திருன்பியவர் எடேல். இவர் மூலம் கோல்டன் பந்தும் சென்னை அணிக்கு உறுதியாகிவிட்டது