புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் இன்றுடன் நிறைவு

ஊடகவியலாளர்கள் 44 பேரை கொன்ற யுகமானது இன்றுடன் நிறைவடைந்து விட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடகத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகவியலாளர்கள் 44 பேரை கொன்ற யுகமானது நிறைவடைந்து விட்டது போல் வடக்கு, தெற்கு உள்ளிட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் காலமும் இன்றுடன் நிறைவடைந்து விட்டதாகவும் அதேபோல் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் ஊடகவியலாளர்கள் தமக்கான பயிற்சியை பல்கலைக்கழகங்களின் ஊடாக பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

எனவே அவர்களுக்கான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதோடு மேலதிக பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நாம் தயாராக இருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். 

அத்துடன் நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. எனவே அனைவராலும் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்க்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ad

ad