புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது


வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.

சென்னை ஓபன் டென்னிஸ்
தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் சென்னை ஓபன் போட்டியாகும். 1997–ம் ஆண்டு முதல் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
20–வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 4–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை நடக்கிறது.
யுகி பாம்ப்ரி
இந்த போட்டியில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தர வரிசையில் 4–வது இடத்தில் இருப்பவருமான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), 12–வது இடத்தில் இருக்கும் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), 19–வது இடத்தில் உள்ள பெனோய்ட் பைர் (பிரான்ஸ்), 25–வது இடத்தில் உள்ள ராபர்டோ பாடிஸ்டா (ஸ்பெயின்), 27–வது இடத்தில் உள்ள குல்லேர்மோ கார்சியா (ஸ்பெயின்), 38–வது இடத்தில் உள்ள ஜிலெச் முல்லர் (லக்சம்பர்க்), 39–வது இடத்தில் உள்ள வாசெக் பொப்சில் (கனடா), 44–வது இடத்தில் உள்ள போர்னா கோரிச் (குரோஷியா), 45–வது இடத்தில் உள்ள அஜாஜ் பெடென் (இங்கிலாந்து) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
உலக தர வரிசையில் 91–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி இந்த போட்டியில் நேரடியாக பங்கேற்கிறார். நடப்பு சாம்பியனான வாவ்ரிங்கா இந்த முறை வென்றால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவருக்கு கெவின் ஆண்டர்சன் சவாலாக விளங்குவார் என்று தெரிகிறது.
ரூ.3 கோடி பரிசு
தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியே 20 லட்சமாகும்.

ad

ad