புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

'விரஹா' எனும் ரோந்துக் கப்பல் இலங்கைக்கு அன்பளிப்பு

விரஹா' எனும் ரோந்துக் கப்பலை இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு துணை அமைச்சர் ராவ் இந்தேர்ஜித்சிங்  அறிவித்துள்ளார்.

குறித்த தகவலை நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில் 'விரஹா' எனும் ரோந்து கப்பல் இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், கப்பலை அன்பளிப்பாக வழங்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்ததை அடுத்து 2015 ஆம் ஆண்டு வராக கப்பல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்காகவும் நல்லெண்ண அடிப்படையிலும் குறித்த கப்பல்  வழங்கப்பட்டுள்ளதாக இந்தேர்ஜித்சிங் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாத நிலையில் வராக கப்பலை இந்தியா, அன்பளிப்பாக வழங்கியுள்ளமைக்கு பல்வேறு எதிர்ப்புக்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad